வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! புகைப்படங்கள்

வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! புகைப்படங்கள்

வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினமான ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியான இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்பட்டது. 

நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி பெரும் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 

மக்கள் வீடுகளில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் பாதம் வரைந்த கோலமிட்டும், கிருஷ்ணருக்குப் பிடித்த பால், தயிர், வெண்ணெய், முறுக்கு, லட்டு, சீடை,  சோமாஸ் என அனைத்து  பலகாரங்களையும் படையலிட்டும், புதுத்துணி உடுத்தியும்,  கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ணர், ராதை, பலராமன், அனுமன் ஆகிய வேடமிட்டும் வீதிகளில் வலம் வருகின்றனர். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு மக்கள் மகிழ்வார்கள். 

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக நாடகங்கள், பஜனை, ஆண்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இன்று தாஹி ஹண்டி எனப்படும் உறியடி திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில்  வாராணசி, மொராடாபாத் ஆகிய மாவட்டத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்,  இந்தாண்டு கிருஷ்ணர் பொம்மை குடைபிடித்தபடியும், வண்ண ஆடையில் கீரிடம் அணிந்தது போன்றும், இருச்சக்கரவாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும் விதவித  அலங்காரங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் கடைவீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com