Enable Javscript for better performance
நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் 

    By DIN  |   Published on : 24th August 2019 04:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Shri-Nellaiappar-Temple-Kumbabishekam-4


    நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

    அதன்படி இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 

    முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 8-ம் தேதி கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெறும். 

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் ஆலுவர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai