ஸ்ரீரங்கத்தில் உறியடித் திருவிழாவையொட்டி நாளை விஸ்வரூப சேவை ரத்து

ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை பாதாளகிருஷ்ணன் கோயில்..
ஸ்ரீரங்கத்தில் உறியடித் திருவிழாவையொட்டி நாளை விஸ்வரூப சேவை ரத்து

ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை பாதாளகிருஷ்ணன் கோயில் மண்டபத்தில் உறியடி திருவிழா நடைபெறுவதையொட்டி விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி  சனிக்கிழமையான இன்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு பிற்பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதனை தொடர்ந்து மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை நம்பெருமாளுக்கு அலங்காரம் அமுது செய்யப்படவுள்ளது.

பின்னர், மாலை 6 மணி முதல் பொது ஜன சேவை நடைபெறுகிறது. 6.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் நம்பெருமாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணர் புறப்பட்டு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி ஸ்ரீகிருஷ்ணர் சன்னதியை 9 மணிக்கு அடைகிறார். மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் ஸ்ரீகிருஷ்ணருடன் புறப்பட்டு சித்திரைவீதிகளில் வலம் வந்து யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்திற்கு 4 மணிக்கு வந்து சேருகிறார்.

பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு உறியடி விழா கண்டருளி மூலஸ்தானத்துக்கு 9 மணிக்கு சென்றடைகிறார். உறியடி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை விஸ்வரூப சேவை கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com