ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - மிதுன லக்கினம் (பகுதி 3)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - ரிஷப லக்கின (19.8.2019) தொடர்ச்சியாக இன்று வானமண்டலத்தில்..
ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - மிதுன லக்கினம் (பகுதி 3)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - ரிஷப லக்கின (19.8.2019) தொடர்ச்சியாக இன்று வானமண்டலத்தில் 3-வது கட்டமான மிதுன லக்கினம் பற்றிப் பார்ப்போம். இந்த வீட்டின் அதிபதி புத்திமான் புதன் ஆவர். புதன் தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றியும், அதேநேரத்தில் 88 நாட்களில் சூரியனை சுற்றி வலம் வருவார். சாயா கிரகங்கள் மிதுனத்திற்கு நண்பர்கள் ஆவார்கள். புதன் வித்யாகாரன் மற்றும் உறவு என்றால் மாமன், அத்தை, மைத்துனர், நண்பர்கள் என்று அடங்கும். இருந்தாலும் காலபுருஷ தத்துவப்படி பார்த்தோமானால் இவரே மூன்றுக்கும் ஆறுக்கும் ஆதிபத்தியம் பெற்றவர். இந்த லக்கனம் 61º -90º பாகையில் அமையும். இங்கு வீட்டில் எந்த கிரகம் உச்சமோ, நீச்சமோ, மூலதிரிகோணமோ பெறுவதில்லை. 

புதன் ஒன்றுக்கும் (ஜாதகரின் குணநலன் கீர்த்தி, புகழ், ஆயுள்) நான்கும் அதிபதியாகவும் (வீடு, சுகம், வாகனத்துக்குரியவர்), சந்திரன் இரண்டுக்குரியவராகவும் (வாக்கு, நேத்ரம்), சூரியன் தைரியத்திற்குரியவராகவும், சுக்கிரன் பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானாதிபதியாகவும் அவரே 12க்குரிய விரயாதிபதியாகவும், செவ்வாய் ரோகாதிபதியாகவும் லாபதிபதியாகவும் இருக்கிறார். குருவானவர் களத்திரகாரகனாகவும், தொழில் கர்ம காரகனாகவும், சனியானவர் அஷ்டமாதிபதியாகவும் பாக்கியவதியாகவும் இருக்கிறார்.
 
மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  பாவர்களாக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு பாவியாக வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

மானே! மிதுன லக்கினத்திற்(கு

அரசன் செவ்வாய் கதிர்பாவர்

தனி சுக்கிரன் சுபனாகும் 

மதியும் சனியும் அற்ப்பலன்

வானோர்  பாவர் திசையதனில்

மன்னு மார கம்என்னே 

தேனே அணைய மதுரமொழிச்

செவ்வாய் முறுவல் சிறுநுதலாய்!

மிதுன லக்கின ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும் அவற்றோடு சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும். இவர்களின் குணம் மற்றும் செயல்களைப் பார்ப்போம் இவர்கள் அழகானவர்கள், அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள், இளமையானவர்கள், பேச்சாளி, கணக்கில் ஆர்வ மிக்கவராகவும், அறிவு மிக்க சிறப்பான செயல் திறனாளி, வீடு, வாகனம், பணவரவு அதிகம் உண்டு அதற்கேற்ற செலவு, முயற்சி இருக்கும், புகழ், அம்மாவிடம் அன்பு, புதன் என்பது இளைஞர் என்பதால் விளையாட்டு வீரராகவும், பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பும் அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பார்கள், நுண்கலை வல்லுநர்கள், கதை ஆசிரியர்கள், சிற்பியாக, அதிகாரமிக்க வேலை அமையும்,  எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார்கள்.

இரவு வானில் விண்மீன் கூட்டங்களில் உள்ள பொலிவான விண்மீன் கூட்டங்களில் மிதுனமும் ஒன்று. மிதுனத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 

வேத ஜோதிடப்படி இதில் உள்ள நட்சத்திர பொது பலன்கள் மட்டும் பார்ப்போம். அவற்றோடு சேரும் பார்க்கும் கிரகம் அமைந்தால் அதன் செய்திறன் மாறுபடும். 

மிருகசிரிஷம் 3, 4

மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு செவ்வாயானவர் ஆதிக்கம் செலுத்துகிறார், இவற்றின் வடிவம் மானின் தலை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பொதுவான குணநலன்கள் என்றால் சுறுசுறுப்பானவர், மன அழுத்தம் மிக்கவர், ஞாபக சக்தி உள்ளவர்கள், பிடிவாத குணம், எதாவது ஒரு துறையில் சிறப்பறிவு உடையவர்கள், உள்ளத்தில் பகையுணர்ச்சி உடையவர்கள், உள்ளுணர்வுகளைப் பதுக்கி வைப்பவர்கள் முக்கியமாக வெளியில் தெரியாத அளவு கோபம் இருக்கும், உள்ளங்கையில் வேல் போன்ற ஆயுத ரேகை உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், யாருக்கும் பயப்படாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், சுய சிந்தனையாளர்கள், வசீகரமான தோற்றம் கொண்டவர்கள், பிறர் பொருள் மீது கொஞ்சம் ஆசை இருக்கும், தர்மவான், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.  

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு  மனித தலை, வைரம் வடிவம், கண்ணீர்த்துளி ஆகும். என் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரையில் ராகுவின் ஆதிக்கம் உண்டு அதன்படி லக்கின புள்ளியின் பொதுவான குண நலன்கள் - உடல் பலமானவர்கள்,  முரட்டுப் பிடிவாதம், பண விஷயத்தில் சாதூர்யமானவர்கள், உண்மைக்குப் புறம்பானவர், உயரமானவர்கள், கண்டிப்பானவர், புத்தாடையில் அவ்வளவு நாட்டம் இருக்காது, தற்புகழ்ச்சியைப் பிடிக்கும், கலகம் மற்றும் ஆத்திரம் இருக்கும், எதிலும் அவசரமாக முடிவெடுப்பார்கள், ஏதாவது நோய் இருந்துகொண்டிருக்கும் முக்கியமாக மூட்டு வியாதி இருக்கும். பல்வேறு நட்புகள் உண்டு, பந்துகள் விரோதம் இருக்கும், சாடல் என்று யோசனை வந்துகொண்டேயிருக்கும், நீதி நேர்மை குறைவானவர்கள், எந்த வேலையும் செய்யும் திறன் கொண்டவர்கள், தனம் ஈட்டுவதற்காக நாட்டம் கொண்டவர்கள், ஆன்மீக வழிபாடு செய்வார்கள்.

புனர்பூசம் (1,2,3)

புனர்பூசம் என்பது குருவின் ஆதிக்கம் கொண்டது.  இவற்றின்  சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு ஆகும். ராமருக்கு உகந்த நட்சத்திரம். மிதுன லக்கின இந்த நட்சத்திர புள்ளி இருந்தால் ஜாதகரின் குணநலன்கள் - தெய்வ பக்தி கொண்டவர்கள், கற்பனை சக்தி, நல்லதையே செய்வ நினைப்பார்கள், உடல் பருமனானவர்கள், புகழ் உச்சியில் சீக்கிரம் செல்ல ஆசைப்படுபவர்கள்,  சூடான தேகம் கொண்டவர்கள், குருக்கள் வழிபாடு செய்வார்கள், மனநிலை மாறும்தன்மை கொண்டவர்கள், காதுமந்தன், தன்மானமிக்கவர்,  நாகரிகம் குறைவானவர்கள், உதவியவரை மறக்கமாட்டார்கள்,  யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள், அனுபவ அறிவு அதிகம், கல்வியில் திறமை கொண்டவர்கள், அதிக இன்பங்களை அனுபவிப்பவன், புத்திசாலியிடம் சண்டையிடுவதில் பிரியம் கொண்டவர்கள், யாரையும் நம்ப மாட்டார்கள், கொஞ்சம் சிக்கனமானவர், சோம்பேறி, நண்பர்களிடம் புகழ் பெறுவார்கள்.

பேச்சுதிறமை அதிகம் இருக்கும் அதனால் இவர்களிடம் ஜெயிக்கமுடியாது, எல்லாவற்றையும்  மனதில் பூட்டி வைத்துக் கொள்வார்கள் அதனால் மனநிலை குறைவு ஏற்படும், இலக்கியத்தில் ஆர்வம் குறைவு ஒழுக்கம் கொஞ்சம் குறைபாடு இருக்கும், பாசக்காரர்கள், சிலருக்கு பல் மற்றும் உடலில் அழிவு நோய்கள் ஏற்படும், பிறர் தனக்கு செய்த உதவியை எப்போதும் மறக்கமாட்டார்கள், சதா சிரித்துக்கொண்டு இருப்பார்கள், சிலர் ஆசிரியராக இருப்பார்கள், அமைதி குணம் கொண்டவர்கள். 

முடிவுரையாக ஜாதகத்தில் மிதுன லக்கினத்தில் உள்ள மூன்று நட்சத்திரம் அதனுள் அடங்கிய ஒன்பது பாதங்கள் கொண்ட செயல்கள் பாதங்களுக்கு ஏற்ப மற்றும் கர்மாவிற்கு ஏற்ப நல்ல மற்றும் பாவ செயல்கள் அவருக்கு ஏற்ற தசா புத்தியில் அரங்கேறும். இந்த வருடம் வரும் குருப்பெயர்ச்சி மிதுன லக்கினகாரர்களுக்கு கால தாமத திருமணம் சீக்கிரம் நடைபெறும். கூட்டுத் தொழிலில் அதிக  லாபம் கிட்டும், முயற்சிமிக்க சாதனைகள் சாதிக்கும் நல்ல நாளாக அமையும். அரசியலில் மாற்றங்கள் நிகழும்.  இந்த இடத்தில் குரு பாவியாக இருந்தாலும் இவர் பார்வை பலம் அதிக நற்பயன்கள் கிட்டும்.

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com