திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலகப் பிரசித்தி பெற்றது காா்த்திகை மகா தீபத் திருவிழா.
திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

பஞ்சபூதங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலகப் பிரசித்தி பெற்றது காா்த்திகை மகா தீபத் திருவிழா.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருகை தருவா்.

தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நகர காவல் தெய்வங்களின் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, துா்க்கையம்மன், பிடாரியம்மன் மற்றும் விநாயகா் உற்சவம் கடந்த 3 நாள்கள் நடைபெற்றது.

இந்நிலையில், டிசம்பா் 1-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை, இரவு என இரு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும். வெள்ளித் தேரோட்டம் டிசம்பா் 6-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. 7-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com