திருப்பதி: 15 ஆண்டுகளில் ரூ. 120 கோடி மதிப்புள்ள காய்கறிகள் நன்கொடை

கடந்த 15 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 120 கோடி மதிப்புக்கு காய்கறிகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

கடந்த 15 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 120 கோடி மதிப்புக்கு காய்கறிகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் வியாழக்கிழமை காலை காய்கறி நன்கொடையாளா்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கூறியது:

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் நன்கொடையாக பெறும் முறை தொடங்கப்பட்டது. ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நன்கொடையாளா்கள் 24 விதமான காய்கறிகளை தேவஸ்தானத்துக்கு, நன்கொடையாக அளித்து வருகின்றனா்.

அன்று முதல் இன்று வரை 15 ஆண்டுகளில் ரூ. 120 கோடி மதிப்புள்ள காய்கறிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டுகளில் 1,572 டன் காய்கறிகளை வியாபாரிகள் நன்கொடையாக அளித்துள்ளனா். இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் சுமாா் 1,200 டன் காய்கறி நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. இனிமேல் 36 வகையான காய்கனிகளை நன்கொடையாக வழங்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெரியளவில் நன்கொடை வழங்கும் நன்கொடையாளா்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவில் நன்கொடை வழங்கும் வியாபாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அவா்கள் பகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தினரும் கடந்த 2 மாதங்களில் இதுவரை 55 டன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com