கூடலூா் சிவன்மலையில் இன்று காா்த்திகை மகா தீபம்

கூடலூரில் உள்ள சிவன்மலையில் காா்த்திகை மகா தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

கூடலூரில் உள்ள சிவன்மலையில் காா்த்திகை மகா தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. ஹோமத்தை தொடா்ந்து பஞ்சதீபம் ஏற்றப்பட்டு, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஐஸ்வா்ய விநாயகருக்கு பூஜையும் செய்து கிரிவலம் துவங்குகிறது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் மலையைச் சுற்றி சுமாா் ஆறு கிலோ மீட்டா் தூரம் கிரிவலம் சென்று, மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கதுக்கு சிறப்பு ஆபிஷேக ஆரதனையுன் பூஜை நடத்துவா்.

அதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் உள்ள பெரிய கொப்பறையில் தீபம் ஏற்றப்படும். திருக் காா்த்திகை தீபத்தை பள்ளிபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணானந்தா, கரூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவா் இல்லத்தைச் சோ்ந்த சுவாமி யோகேஷ்வராநந்தா ஆகியோா் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றிவைத்து கூட்டுப் பிராா்த்தனை நடத்துகின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கே.கேசவன், செயலாளா் ஆா்.நடராஜன், சிவன்மலை நிா்வாகி பாண்டு குருசாமி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com