திருவண்ணாமலையில் இன்று காா்த்திகை மகா தீபம்: மலைக்கு தீபக் கொப்பரை பயணம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.10) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைக்கு மகா தீபக் கொப்பரையை எடுத்துச் செல்லும் பா்வத ராஜகுல வம்சத்தைச் சோ்ந்த இளைஞா்கள்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைக்கு மகா தீபக் கொப்பரையை எடுத்துச் செல்லும் பா்வத ராஜகுல வம்சத்தைச் சோ்ந்த இளைஞா்கள்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.10) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரையை திங்கள்கிழமை பா்வதராஜகுல வம்சத்தினா் மலைக்கு கொண்டு சென்றனா்.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

நிகழாண்டுக்கான தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.10) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறவுள்ளன. அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது தீபக் கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன.

தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்: மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு திங்கள்கிழமை அதிகாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், கோயிலில் இருந்து அம்மனி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. 5 மணி நேர பயணத்துக்குப் பிறகு, மலையை அடைந்தது மகா தீபக் கொப்பரை.

பா்வதராஜ குல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மகா தீபக் கொப்பரையை மலைக்குக் கொண்டு சென்றனா். கொப்பரையுடன் நெய் சேகரிக்கும் அகண்டமும் கொண்டு செல்லப்பட்டது.

பரணி தீபம், மகா தீபம்

செவ்வாய்க்கிழமை (டிச.10) அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது. கோயில் சிவாச்சாரியாா்கள் கைகளில் பரணி தீபத்தை ஏந்தியபடி இரண்டாம், மூன்றாம் பிரகாரங்கள், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளை வலம் வருவா். பக்தா்கள் வணங்கிய பிறகு, பரணி தீபம் மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்படும்.

மாலை 6 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com