பிப் .11-இல் திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு

திருநள்ளாறு கோயிலில் பிப்.11-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி காவல்துறைத் தலைவர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிடும் டிஜிபி சுந்தரி நந்தா. உடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா.
திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிடும் டிஜிபி சுந்தரி நந்தா. உடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா.

திருநள்ளாறு கோயிலில் பிப்.11-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி காவல்துறைத் தலைவர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிப்ரவரி 11-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, இதன் சார்பு கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், பிரதான கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்
படுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் செய்திருக்கும் வசதிகள் குறித்து நேரில் அறியும் வகையிலும் புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா வெள்ளிக்கிழமை கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் ஆகியோர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.
ஆய்வுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் டிஜிபி சுந்தரி நந்தா கூறியது:  வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏறக்குறைய 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கின்போது புனித நீரை பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் தெளிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ஒரே இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்காது.
குற்றச் செயலில் ஈடுபட்டோர் குறித்த புகைப்படத்துடன் கூடிய பதாகை ஆங்காங்கே மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படும். காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றார்.
முன்னதாக, மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகிய சந்நிதிகளில் அவர் தரிசனம் செய்தார். 
சிவாச்சாரியார்கள் அவருக்கு பிரசாதம் வழங்கி, மரியாதை செய்தனர். இந்த ஆய்வின்போது, மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com