சுடச்சுட

    

    சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 8-ல் துவக்கம்

    By DIN  |   Published on : 06th February 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kumbabishegam1

    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ம் தேதி தொடங்குகிறது. 

    தேவார பாராயணம், தொடர்ந்து பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 

    9-ம் தேதி 3-ம் கால யாகசாலை பூஜையும்,  10-ம் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. 

    11-ம் தேதி யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல்10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

    பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெறலாம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai