சுடச்சுட

    

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 06th February 2019 02:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    veeraragavar

     

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

    திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் காலையும் மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று விரராகவர் கோயிலில் தேரோட்டம்நடைபெற்றது. திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

    பிப்ரவரி 8-ம் தேதி காலை 10 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 9-ம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரம் வீதியுலா நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai