சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 8-ல் துவக்கம்

குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ம் தேதி தொடங்குகிறது. 
சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 8-ல் துவக்கம்

குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ம் தேதி தொடங்குகிறது. 

தேவார பாராயணம், தொடர்ந்து பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 

9-ம் தேதி 3-ம் கால யாகசாலை பூஜையும்,  10-ம் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. 

11-ம் தேதி யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல்10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com