திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின்முக்கிய நிகழ்வாகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. 
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் காலையும் மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று விரராகவர் கோயிலில் தேரோட்டம்நடைபெற்றது. திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

பிப்ரவரி 8-ம் தேதி காலை 10 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 9-ம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரம் வீதியுலா நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com