சுடச்சுட

  

  இந்த வாரம் திடீர் தனவரவு எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

  Published on : 08th February 2019 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrology

  12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.8 - பிப்.14) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீ ராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை  உயரும். சகோதரி உறவில் சற்று விரிசல்கள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச் சுமை குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். 

  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் காண்பார்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுக்கவும். மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தவும்.

  பரிகாரம்: ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 9. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பணவரவு தாராளமாக இருக்கும். செயல்களை குறைவில்லாமல் முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களின் உதவியை  எதிர்பார்க்க முடியாது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். ஊதிய உயர்வுக்கு வழி உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். வயல்களை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும்.

  அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரம். யாரையும் நம்பி விட வேண்டாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கை
  நழுவிப் போகும். சக கலைஞர்களிடம் நட்பு பாராட்டவும். 

  பெண்மணிகள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்.

  பரிகாரம்: திங்களன்று பார்வதி தேவியை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  தொழிலில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் கவனமாக நடந்துகொள்ளவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களை பயிரிட்டு  லாபம் பெறலாம்.

  அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுபடுவதைத் தவிர்க்கவும். 

  மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.

  பரிகாரம்: மேற்கு பார்த்த விநாயகரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  பணவரவு சரளமாக இருக்கும். கொடுத்தவாக்கை எப்படியும் நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சீர்படும். எவருக்கும் முன்ஜாமீன் போடுவது கூடாது. குடும்பத்தில் சிரமங்கள் குறைந்து  மகிழ்ச்சி நிறையும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களும் மனக்கசப்பு நீங்கி நட்பாக நடந்துகொள்வர். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களாலும் கால்நடைகளாலும் வருமானம் பெருகும்.

  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மையுண்டாகும். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப் பேச வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் உங்கள் ரகசியங்களை மனம் திறந்து வெளியாரிடம் பேச வேண்டாம். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி காண்பர். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: "நமசிவாய' பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபித்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்:10, 11.  

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும்.  வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை சிறிது குறையும். மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு செயல்படவும். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிது ஈடுபாடு குறையும். வேலைகளை நன்றாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவிற்கு குறைவு வராது. வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி  வருமானம் பெருகும். சிலருக்கு பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.  

  அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்சமயம் உள்ள நிலையை பயன்படுத்தி நற்பெயர் எடுக்க முயலவும். கலைத்துறையினருக்கு பல நாட்களாகத் தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடிவடையும். 

  பெண்மணிகள் சேமிப்பை எடுத்துச் செலவு செய்ய நேரிடும். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  

  பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவதரிசனம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 12. 

  சந்திராஷ்டமம்: 8, 9, 10. 

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். நீங்கள் துணிச்சலுடன் செய்யும் செயல்கள் வீண்போகாது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும்.  

  உத்தியோகஸ்தர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் திருப்திகரமாக முடியும். விளைபொருள்களின் விற்பனையால் லாபம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு மனச்சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். தொண்டர்களின் ஆதரவு குறைந்திருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

  பெண்மணிகள் எல்லோருடமும் அனுசரித்துச் செல்லவும். கணவரிடம் ஒற்றுமையோடு பழகவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் "கந்தசஷ்டி கவசம்' படித்து கந்தனை வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 9, 13. 

  சந்திராஷ்டமம்: 11, 12. 

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாக காணப்படும். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை சீராக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்யவும். மேலதிகாரிகள் சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும்.  விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். 

  அரசியல்வாதிகள் மீது வீண் பழி விழும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று, உங்கள் செயல்களைச் செய்யவும். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

  பெண்மணிகளுக்கு பேச்சில் கவனம் தேவை. கணவருடன் சுமுக உறவு நீடிக்கும். மாணவமணிகள் பெற்றோர்களின் சொல்கேட்டு நடந்தால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். 

  பரிகாரம்: ராமபக்த அனுமனை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 11. 

  சந்திராஷ்டமம்: 13, 14.  

  {pagination-pagination}
  விருச்சிகம்(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெற்றிகள் சூழும். கடமைகளைச் சரிவரச் செய்து விடுவீர்கள். வீண் அலைச்சல்கள் ஏற்படும். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் ஏற்படாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். பொருள்களின் விற்பனை நன்கு நடைபெறும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவார்கள்.  

  அரசியல்வாதிகள்எத்தகைய சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனே செயல்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து பணவரவைப் பெறுவீர்கள். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் மேலோங்கும். மாணவமணிகள் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரிடம் ஆதரவு கிடைக்கும்.

  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  மகிழ்ச்சிகரமான வாரமிது. உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். பொருளாதார நிலைமை அபிவிருத்தி ஏற்படும். வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் வெற்றிவாகை சூடுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். எதிரிகளின் மூலம் இருந்து வந்த சங்கடங்கள் குறையும். செயல்களை வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடையமுடியும். முயற்சிகள் எதிர்காலத்தில் நற்பலனைத் தரும்.

  பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பர். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.

  பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  எல்லாவிதமான பிரச்னைகளும் அகலும். உறவினர்களால் நன்மையடைவீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். பேச்சில் உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது. உங்கள் அறிவும் ஆற்றலும் பிரகாசிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் குத்தகை நிலுவைகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டி வரும்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். முக்கிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகள் இருக்கும். புகழைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். மாணவமணிகள் விளையாட்டில் நேர்த்தியுடன் ஈடுபடுவார்கள். நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும்.

  பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  செயல்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய காலகட்டமாகும். குடும்பத்தில் எதிர்பார்த்து காத்திருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கெதிரான வழக்குகள் சாதகமாக முடியும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரும். சக ஊழியர்களும் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். நண்பர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் தொடரும்.

  அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.  உட்கட்சிப்பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வார்கள். 

  கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். குழந்தைகளும் உங்களுக்கு ஏற்றவாறு அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்திப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

  பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். பிரதோஷ காலத்தில் சுவாமியை தரிசிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 13.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  உங்கள் செயல்களில் இருந்துவந்த முட்டுக்கட்டைகள் விலகி, நன்மைகள் அதிகரிக்கும். வருமானம் கூடும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவார்கள். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் சமாளிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். 

  அரசியல்வாதிகள், தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். மேலிடத்தின் பார்வையிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். வருமானம் குறைந்து காணப்படும். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் விளையாட்டின்போது கவனம் செலுத்தவும்.

  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai