சுடச்சுட

  

  சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்,12-ல் நடை திறப்பு 

  By DIN  |   Published on : 09th February 2019 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sabarimalai

   

  சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 

  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார். 

  மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோயில் நடை  திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து  5 நாட்கள் நடைபெறும் சிறப்பு  பூஜைகளுக்கு பின் 17-ம் 

  தேதி  இரவு 10.30 மணித்துஅத்தாழபூஜைக்குபின் அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai