சுடச்சுட

  

  திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் இன்று மாசிப் பெருவிழா கொடியேற்றம்

  Published on : 10th February 2019 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  THYAG

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோயில் மாசி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
   பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாகும். இக்கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசிப் பெருவிழா முக்கியமானதாகும். 11 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோயில் உள் பிராகாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் இரவு 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.
   இதனைத் தொடர்ந்து விழாநாள்களில் காலையும், இரவும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் சந்திரசேகரர் வீதி உலா தினமும் நடைபெறும். அதன்படி திங்கள்கிழமை- சூரிய, சந்திர வாகனம், செவ்வாய்க்கிழமை-பூத, சிம்ம வாகனம், புதன்-நாக, ரிஷப வாகனம், வியாழன்-நந்தி, அஸ்தமானகிரி வாகனம், வெள்ளி-யானை வாகனம், சனி- திருத்தேரோட்டம், ஞாயிறு-குதிரை, இந்திர விமானம் உள்ளிட்டவைகளில் உற்சவமூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
   பிப்.18-ல் திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம் ஒன்பதாம் நாளான பிப்.18-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்று மாலையே சுந்தரர்-சங்கிலி நாச்சியாருக்கு குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி உற்சவமும், இறுதியாக 11-ஆம் நாளில் புதன்கிழமை பந்தம்பறி உற்சவமும் நடைபெற உள்ளது.
   மாசிப் பெருவிழாவினையொட்டி நகரத்தார் சங்கம் சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மற்றும் தக்கார் கே.சித்ராதேவி தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai