சுடச்சுட

  
  _34A1770-01

   

  காஞ்சிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட 108 சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

  சுங்குவார்சத்திரத்தை அடுத்த கண்ணந்தாங்கல்-மதுரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணந்தாங்கல் கிராமத்தில் 108 சக்தி பீட ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நான்கு ராஜகோபுரங்களுடன், மூலவராக ஸ்வர்ண காமாட்சி அம்மன் காட்சியளிக்கும் இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பிப்.1-ம் தேதி காலை கோபூஜையுடன் தொடங்கியது.

  இதைத் தொடர்ந்து 6-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 7-ம் தேதி காலை மூன்றாம் கால யாக பூஜையும், மாலை 4-ம் கால யாகபூஜையும், தொடர்ந்து 8-ம் தேதி காலை 5-ம் கால யாகபூஜையும், மாலை 6-ம் கால யாக பூஜையும், 9-ம் தேதி காலை 7-ம் கால யாக பூஜையும், மாலை 8-ம் கால யாகபூஜையும் நடைபெற்றன.

  ஞாயிற்றுக்கிழமை காலை 9-ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமானங்கள் மற்றும் மூலவர் ஸ்வர்ண காமாட்சி அம்மனுக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 108 சக்தி பீடங்களில் வழிபட்டார். முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வர்ண காமாட்சி அம்மனை வழிபட்டனர். விழாக் குழுவினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai