சுடச்சுட

  

  திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா

  Published on : 13th February 2019 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruchendur

  மாசித் திருவிழா 3ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான். வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளிய தெய்வானை அம்மன்.

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் 3-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழந்தருளி வீதியுலா வந்தனர்.
  இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
  3ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி  வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  இன்று...: மாசித் திருவிழா 4-ஆம் நாளான புதன்கிழமை (பிப். 13) காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வர உள்ளனர். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai