சுடச்சுட

  

  ராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் பிரவேசம்! 

  By DIN  |   Published on : 13th February 2019 01:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahu-ketu


  வாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி இன்று நிகழ்ந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. 

  நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1-ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசித்துள்ளார். 

  ராகுவைப் போல் கொடுப்பவர் இல்லை, கேதுவைப் போல் கெடுப்பவர் இல்லை என்பர், அப்படிப்பட்ட ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகிறார்கள். அந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இதையொட்டி, திருநாகேஸ்வரம், கும்பகோண நாகநாத ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. 

  ராகு-கேது பெயர்ச்சியில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாகநாத ஸ்வாமி கோயிலில் கூடியுள்ளனர். 

  இந்தாண்டு ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்

  மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம்

  ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள் 

  ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம்

  சரி, பொது பரிகாரமாக என்ன செய்யலாம்?

  ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் நாகதேவதையை வணங்குவது நல்லது. 

  ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மையைத் தரும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai