திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம்

திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற வள்ளியம்மை திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
 திருத்தணி முருகன் கோயிலில் மாடவீதிகளில் வள்ளியம்மையுடன் உலா வந்த முருகன்.
 திருத்தணி முருகன் கோயிலில் மாடவீதிகளில் வள்ளியம்மையுடன் உலா வந்த முருகன்.


திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற வள்ளியம்மை திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாயொட்டி மூலவர் முருகப் பெருமானுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம், வேல், பச்சைக்கல் முத்து ஆகியவற்றை அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மலைக் கோயில் மாடவீதிகளில் உற்சவர் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகன் காட்சியளித்தார். அதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு முருகப் பெருமானுடன் வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com