ராகுவும், ராகுவால் திருமணத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்!

பொதுவாகவே, சில ஜோதிடர்களும், இந்திய பொது மக்களும், திருமண கால தாமதத்திற்கு..
ராகுவும், ராகுவால் திருமணத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்!

1. பொதுவாகவே, சில ஜோதிடர்களும், இந்திய பொது மக்களும், திருமண கால தாமதத்திற்கு மற்றும் திருமண வீழ்ச்சிக்கு மூல காரணமாய் இருப்பது ராகு, என்றே கூறும் ஒரு போக்கு நிலவுகிறது.

2. ஒருவரின் ஜனன கால ஜோதிட கட்டத்தில், ராகு (அல்லது கேது) ஒரு இடத்தில் உட்கார்ந்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தவோ அல்லது திருமண வாழ்வைத் தடைபடுத்தவோ கூடும், என்பது உண்மையா! 

3. நாம் இப்போது, சில ஜோதிடர்களும், ஜோதிட தளங்களும் ராகு மற்றும் கேதுக்களுக்கு எதிராக கிளப்பிவிடப்பட்ட கருத்துக்களைப் பற்றியும் அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றியும், விரிவாகக் காண்போம்.

ராகு / (கேது), ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 1, 2, 3, 7, 8 மற்றும் 11-ஆம் வீடுகளில் இருப்பின் அது திருமணத் தடையை ஏற்படுத்தும்.

இந்த கோட்பாட்டைத் துல்லியமானதும் சரியானதுமாக நாம் கருதுவோமே ஆனால், 50% மக்கள் தொகையில் யாவருக்கும் திருமண குறைபாடுகளோ அல்லது திருமணத் தடையோ ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. அதாவது ராகு (அல்லது) கேது ஜனன ஜாதகத்தில் 12 கட்டத்திலும் இருந்தாலும், என்பது போலாகிறது.

சில ஜோதிடர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒரு சில ஆண் / பெண் ஜனன ஜாதகத்தில் ராகு மற்றும் கேது இடம்பெற்று உள்ளது போல் உள்ள ஆண் / பெண் ஜாதகத்திலும் உள்ளதென்றால் தான் அது சரியான தீர்வென்றும் கூறுவதைக் காண முடிகிறது.

இந்த கட்டுரையில் முதலில் ராகுவின் அடிப்படை குணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்

1. ராகு மற்றும் கேதுக்கள் முதலில் தனது பெரிய எதிரியாக சூரியனையும், சந்திரனையும் பாவிக்கும்.

2. சூரியனும், சந்திரனும் தனது முழுமையான சக்திகளை ராகுவுக்கு மிக அருகில் செல்லும் போது இழக்கும்.

3. ராகு முதலில் பொருள் சார் உலகத்தையும், இன்பம் மற்றும் ஆதாயத்தையும் குறிக்கும்.

4. ராகு எனும் நிழல் கிரகத்திற்கு ராசி அடையாளம் என்று ஏதும் கிடையாது. ஆனால், அது இருக்கும் ராசி அதிபதியினை கண்ணாடியில் பார்ப்பது போலான காரகத்துவங்களையும் பண்புகளையும் கொண்டிருக்கும்.

5. ராகு ஒரு ராசியை கடக்க சுமார் 18 மாதங்களை எடுத்துக்கொள்வதால் மொத்த 12 ராசிகளையும் கடக்க 18 வருடங்கள் ஆகிறது.

6. ராகு மற்றும் கேது தனக்குள் சமமான தூர இடைவெளியில் மற்றும் 180 பாகை தொலைவிலும் பவனி வந்து கொண்டிருக்கும்.

7. ராகு மற்றும் கேதுக்கள், இவ்விருவனவற்றிற்கும் 3, 7, 11 பார்வைகள் உண்டு.

ராகு, வலிமையை பெருக்கும் கிரகம்:

1. ராகு தான் இருக்கும் ராசியின் அல்லது தன்னுடன் இணைந்திருக்கும் / தொடர்பு பெற்றிருக்கும் கிரகங்களின் தன்மைகள், குணங்கள், போன்றவற்றை வெறுமனே பெருக்கும்.

2. அதாவது அதன் முடிவுத்தன்மையை அறியாவண்ணம் ஜாதகரின் செயல்பாடுகளைப் பெருக்கும் அல்லது திரும்ப திரும்ப செய்ய வைக்கும். ஒரு ஜாதகர், ராகுவின் பாதிப்புக்கு உள்ளானாரா என்பதை அறிய, சில உதாரணச் செயல்பாடுகளைக் காணலாம்.

1. ஜாதகர் புகைப்பதற்கு, குடிப்பதற்கு மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாக்கப்படுவது.

2. ஜாதகர் வேலையே என்றிருப்பது அல்லது நீண்ட நேரம் வேலையைச் செய்வது.

3. ஜாதகர், சில உணவு வகைகள் / பழ ரசங்கள் போன்றவற்றை விட முடியாமல் தவிப்பது அல்லது சரியான இடைவெளியில் அதனை எடுத்துக்கொள்வது.

4. அதே போல் ஜாதகர் படிப்பதிலேயே சம்பந்தப்பட்டிருப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் புதுப்புது நூல் பிரிவுகளைப் படித்துக்கொண்டே இருப்பது.

5. ஜாதகர் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் உறவு கொண்டிருப்பது.

6. ஜாதகர் தொடர்ச்சியாக களவு, குற்றம் அல்லது சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது.

7. ஜாதகர் காதல் உறவையோ அல்லது பாலியல் உறவையோ, பலரிடம் வைத்துக்கொள்வது.

முடிவு / விளைவு:

ராகு தனது செயலை ஒரு முறை ஈடுபடுத்திக்கொண்டால் அதனைப் பெருக்கும் / பிரதி எடுத்தது போன்று திரும்பத் திரும்ப அந்த செயலை அதிக எண்ணிக்கையில் செய்ய வைக்கும் .

ராகு காலம்

நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான், தினம் தோறும் வெவ்வேறு காலத்தில் சுமார் 1 1/2 மணி நேரம், ராகு ஆதிக்கம் செலுத்தும் காலம் தான் ராகு காலம் என்பது.

இந்துக்களின் வேத சாரத்தின் படி, இந்த ராகு ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், இந்துக்களாகிய நாம் அனைவரும் சுப மற்றும் அசுப நிகழ்வுகளைக் கூட துவங்க வேண்டும் என நினைப்பதும் இல்லை மற்றும் நடத்துவதும் இல்லை. 

அவ்வாறு இந்த ராகு காலத்தில் நாம் துவங்க இருக்கும் காரியங்கள் / வேலைகள் அத்தனையும் ராகுவானவர், அந்த ஜாதகரைப் பலமுறை திரும்ப திரும்ப செய்ய வேண்டி வரும்படி செய்வார்.

இது சம்பந்தமாக, சில உதாரணங்களை இப்போது காணலாம்..

1. திருமணத்தை ராகு காலத்தில் செய்யவவேண்டி வந்தால் அந்த திருமண வாழ்வு பல்கிப் பெருகவேண்டி வரும். ஒன்று அந்த திருமணம் தோல்வி கண்டு வேறு திருமணம் நடக்கக் காரணமாகும். அல்லது, அந்த ஜாதகர் பல திருமணங்களைச் செய்ய வேண்டி வரலாம்.

2. ஒரு ஜாதகர் இந்த ராகு காலத்தில் அவரின் ஒரு நோய்க்கு மருத்துவமனை சென்றார். ஆனால் அவர் மறுபடி மறுபடி அதே நோய்க்கு பலமுறை செல்லவேண்டி வரும்.

3. ஒரு ஜாதகர் இந்த ராகு காலத்தில் அவரின் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றார். ஆனால் அவர் மறுபடி மறுபடி அதே அறுவை சிகிச்சையை பலமுறை செய்ய வேண்டி வரும்.

4. அதே போல் ஒருவர் ஒரு வேலைக்கான போட்டிக்கு செல்வார் என்றால் அவர் மறுபடி மறுபடி செல்ல வேண்டி வரும், காரணம் அந்த ஜாதகர் அந்த வேலைக்கான  தகுதியை அவர் இன்னும் பெறவில்லை எனலாம்.

5. ஒரு ஜாதகர் அவரிடம் உள்ள பணத்தைப் பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த ராகு காலத்தில் வேறு ஒருவருக்கு அளிப்பார் அல்லது இவ்வாறு தங்களின் செயலை முடிவற்ற நிலைக்கு செய்து வருவார்.

6. ராகு காலத்தில் ஒருவரது இறப்புக்குப் பின் அவரின் அடக்கம் செய்வது அல்லது கடைசி நேர செயல்கள்  ஆனது அந்த ஜாதகரை மீண்டும் மீண்டும் அந்த இறப்புக்கான  செயல்களை செய்யவேண்டி வரலாம்.

7. ஒரு பிரயாணத்தை இந்த ராகு காலத்தில் ஒரு ஜாதகர் துவங்குவார் எனில் அந்த பிரயாணம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டி வரும். அதுவே பொழுபோக்குக்கான பிரயாணம் என்றால் மனதில் மகிழ்ச்சி கூடும். எனவே ஒரு செயல் நல்லதோ அல்லது கெட்டதோ யார் ஒருவர் இந்த ராகு காலத்தில் துவக்கவோ அல்லது நடத்தவோ  செய்தால், அந்த ஜாதகரை ராகு திசையில், அதே செயலை திரும்ப திரும்ப செய்யவே வேண்டி வரும்.

இனி  ராகுவானவர் ஒவ்வொரு ராசி கட்டத்திலும் இருந்து  அவரால் ஏற்படும் / நிகழும் தன்மையைக் காணலாம். ராகுவானவர் ஒரு ஜாதகருக்கு, 1 ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருப்பார் எனில் அல்லது லக்கினாதிபதிக்கு மிக நெருக்கமான இடைவெளியில் ( பாகையில் ) இருப்பார் எனில், ஜாதகரின் உடல் மற்றும் மனது அமைதியற்று காணப்படும். அதாவது அந்த ஜாதகர்கள் ஒரே இடத்தில அதிக நேரம் அமர்ந்திருக்க விரும்ப மாட்டார்கள் . மேலும் அவர்கள், சுற்றித் தெரிவதில் ஆர்வம் கொண்டிருப்பர்.

பொருள்சார் வாழ்வை விரும்புபவராகவும், அடிக்கடி பார்ட்டிகளில் கலந்துகொள்வதில் ஆர்வமும், பிரயாணத்தில் இன்பத்தைத் துய்ப்பவர்களாகவும், ஒன்றுக்கும் உதவாத  விஷயத்திற்கு நேரம் செலவழிப்பவராகவும் இருப்பார்கள்.

லக்கினத்தை தவிர மற்ற வீடுகளில் ராகு இருந்தால், அந்த ஜாதகர்கள் எப்படி இருப்பார்கள், மற்றும் ராகு, கேதுவால் ஏற்படும் தொல்லைகளுக்கு, சரியான பரிகாரங்களைப் பற்றி அடுத்த வாரம் இதே நாளில் காணலாம் அன்பர்களே.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

சந்தேகங்களுக்கு :- 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com