சுடச்சுட

  

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

  Published on : 09th January 2019 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  murugan1

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இக்கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியின் போது கொடிக் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், மா  இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 
  முன்னதாக உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

  தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட  பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

  விழாவில், வருகிற 16 ஆம் தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும். பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய வைபவமான தெப்பத் திருவிழா ஜனவரி 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு  நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி(பொறுப்பு) மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai