Enable Javscript for better performance
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.15-ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.15-ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனம்

    Published on : 09th January 2019 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் நேற்று தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. 

    மார்கழி எண்ணெய்க் காப்பு தொடர்ந்து ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு தினமும் காலை 9.00 மணிக்கு ஆண்டாள் தங்க பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருள்கிறார். 

    தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்க்காப்பு உற்சவத்தில் பங்கேற்கிறார். தை மாதப்பிறப்பான ஜனவரி 15-ம் தேதி மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16-ம் தேதி பெரியாழ்வார் சந்நிதியில் கணு வைபவம் நடைபெறுகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai