Enable Javscript for better performance
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது?

  Published on : 11th January 2019 12:40 PM  |   அ+அ அ-   |    |  

  astrology-1

  12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார ராசிபலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 


  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உடன்பிறந்தோர்களால் நன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். 

  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செல்வனே செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருந்து வரும். தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.  நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். கட்சிமேலிடம் உங்கள் நடவடிக்கைகளை கவனிக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். 

  பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். 

  மாணவமணிகள் மதிப்பெண்களை அள்ளுவார்கள்.  கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

  பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 11, 12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். உங்கள் சமயோசித புத்தியை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சமுகமான நிலைமை உருவாகும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும்.  விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.  மகசூல் அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்களின் கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். 

  பெண்மணிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். 

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்ரு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை சீராக இருக்கும். மனதை காரணமில்லாத கவலை குடிகொள்ளும். செய்யும் காரியங்களில் மந்தநிலை காணப்படும். நல்லவர்களது நட்பை கூட்டிக்கொள்ளுங்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு கூடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.  விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவார்கள். மாற்றுப் பயிர் முயற்சியும் வெற்றி பெறும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்ப்பார்ப்புகள் கூடும். எவரையும் நம்பி கருத்துகளைக் கூற வேண்டாம். மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். தெய்வ வழிபாட்டைப் பெருக்கிக் கொள்ளவும்.  

  மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆசிரியர்களின் ஆதரவு குறைந்திருக்கும்.

  பரிகாரம்: செவ்வாயன்று பைரவரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம்  (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதாரத்தில் குறை இருக்காது. உடன்பிறந்தோர் வகையில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல்நலம் பாதிக்கப்படலாம். கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். 

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை கவனத்தோடு செய்து முடிப்பர். இருப்பினும் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். கணக்கு வழக்குகளில் ஜாக்கிரதையாக இருக்கவும். 

  விவசாயிகள் கூடுதல் விளைச்சல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவார்கள்.

  அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். தொண்டர்களுக்கு உதவுவார்கள். எதிர்கட்சியினருக்கு பயந்து உங்களிடமிருந்து ஒதுங்கி இருப்பர். 

  கலைத்துறையினருக்கு வருமானம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

  பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 11,14. 

  சந்திராஷ்டமம்: 11.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தன்னம்பிக்கை கூடும். பயணங்கள் லாபம் அளிக்கும். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவார்கள்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடிப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவார்கள்.

  வியாபாரிகள் வியாபாரத்தில் புதுமைகளைப் புகுத்துவார்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். 

  அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படும். மாற்றுக் கட்சியினரிடம்  மனம் திறந்து பேசவேண்டாம். 

  கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே முடிப்பார்கள். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  

  பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாள் கோயிலில் பெருமாள்} தாயாரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 15. 

  சந்திராஷ்டமம்: 12, 13, 14.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். தந்தையோடு அனுசரித்துச் செல்லவும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு  அதிகரித்தாலும் அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். வியாபாரிகள் கவனத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டால் வருமானத்தை ஈட்டலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும்.  தோட்டப்பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம்.

  அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வார்கள். கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். மதிப்பு மரியாதை இருக்கும். பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவார்கள். 

  மாணவமணிகளுக்கு பெற்றோர் ஆதரவு உண்டு. விளையாட்டுகளில் வெற்றி பெற அதிகம் சிரத்தை தேவை.

  பரிகாரம்: வெவ்வாயன்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 14. 

  சந்திராஷ்டமம்: 15, 16.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  செய்யும் தொழிலில் சலிப்புகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். நெடுநாளைய எண்ணங்கள் நிறைவேறும். பெரியோர்களின் தொடர்பும் ஆன்மிக ஈடுபாடும் நலம் சேர்க்கும். 

  உத்தியோகஸ்தர்கள் உழைப்பைக் கூட்டிக் கொண்டு உழைத்து நற்பெயர் எடுப்பார்கள். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்போடு நடந்து கொள்வார்கள். 

  வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பார்கள். புதிய முதலீடுகளில் சற்று கவனம் தேவை.  விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். கால்நடைகளால் லாபங்கள் கூடும். 

  அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். கட்சிப் பிரசாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு கிட்டும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரையும் ஆசிரியரையும் அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: சனீஸ்வரரையும் விநாயகரையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 16. 

  சந்திராஷ்டமம்: 17.

  {pagination-pagination}
  விருச்சிகம்  (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். எதிர்வரும் இடையூறுகளை மிக்க சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனதிருப்தி காண்பார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். 

  மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். விளையாட்டில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

  பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 16.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  வீண் அலைச்சல்கள் உண்டாகும்.  பொருளாதாரத்தில் குறைவு வராது. பெயரும் புகழும் அதிகரிக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாகவே முடியும். தொழிலில் சில தடுமாற்றங்களைச் சந்திப்பீர்கள்.  உறவினர்கள்,  நண்பர்களை அனுசரித்துச் செல்லவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமங்கள் குறையும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்கள் உதவும் நிலையில் இருக்கமாட்டார்கள். 
  வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து தங்கள் பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்வார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும்.  

  அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மக்களின் சரியான தேவைகளுக்கு மட்டுமே பாடுபட்டு நற்பெயர் எடுக்க வேண்டும். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவர். 

  பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவமணிகள் அதிகம் உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையையும் விநாயகரையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட காரியங்களில் படிப்படியாக வெற்றிகளை அடைவீர்கள். சுபச்செலவுகளைச் செய்வீர்கள். உறவினர்களும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். மனதில் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் நேர்வழியில் செல்லவும். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். யுக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விவசாய இடுபொருள்களுக்கு செலவு செய்ய வேண்டி வரும்.

  அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலால் கவலை அடைவார்கள். தொண்டர்களைச் சமாதானப்படுத்த முனைவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவீர்கள்.  

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். மாணவமணிகளின் மதிப்பெண்கள் குறையும். ஆனாலும் முயற்சிகளைக் கைவிடாமல் முயலவும்.

  பரிகாரம்: சனிபகவானையும் குருதட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 17.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் உற்சாகம் கரைபுரளும் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால்  நன்மை உண்டாகும்.  வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. 

  உத்தியோகஸ்தர்கள்  மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் சுமை குறையும்.  சக ஊழியர்களும் சகஜமாவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பார்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிர் விளைச்சலைக் கூட்டுவார்கள். 
   
  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். அதிகரிக்கும். உங்கள் சொல்லுக்கு கட்சி மேலிடம் செவிசாய்க்கும். புதிய வாகன யோகம் உண்டாகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்மணிகள் வீண் வாதங்களில் ஈடுபடாமல் குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். 

  மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சுறுசுறுப்புடன் நடந்துகொண்டு விளையாட்டுகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.

  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். உறவினர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். ஊதிய  உயர்வுக்கும் வழி உண்டாகும். சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். 

  வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் நன்கு உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணங்கள் மேலோங்கும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகள் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகவும்.

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.

  பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai