சுடச்சுட

  

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்

  By DIN  |   Published on : 12th January 2019 03:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  samayapuram

   

  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

  இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. 

  தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் 21-ம் தேதி கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்று மாலை 3.30 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மறுநாள் வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai