இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரம் (ஜனவரி 18 - ஜனவரி 24) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரம் (ஜனவரி 18 - ஜனவரி 24) பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் சிறிய தொய்வுகள் உண்டாகும். திட்டமிட்ட வேலைகளை முனைப்புடன் செய்யவும். எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடமைத் தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைப் பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் எதிரிகளால் தொல்லை அடைவர். கூட்டாளிகளின் அவநம்பிக்கைக்கு ஆளாவீர்கள். 

விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். ஆனாலும் புதிய கழனிகளை வாங்கும் எண்ணங்களைத் தள்ளிப்போடவும். 

அரசியல்வாதிகள் செயல்கள் தடையுடன் வெற்றி அடையும். உங்களின் பேச்சை கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். ஆன்மிகத்தில் ஆர்வம் பெருகும். மாணவமணிகள் அறிவியல்  பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்:  புதன்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 18, 19.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கௌரவம் உயரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். உறவினர்களின் மூலம் சிறு தொல்லைகள் ஏற்படலாம். செலவுகளைக் கட்டுபடுத்தி சேமிப்புகளைக் கூட்டிக் கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் சிறு பயணங்கள் செய்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைக்க நேரிடும். காலதாமதமானாலும்  இறுதியில் வெற்றி பெறுவீர்கள். 

விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருப்பதால் விளைச்சல் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். பெரிய மனிதர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். 

மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 

பரிகாரம்:  சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். 

அனுகூலமான தினங்கள்: 18, 20.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம்(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எவற்றுக்கும் பதற்றப்படாமல் முன்கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையுடனும் செயலாற்றவும். தந்தை வழி உறவுகளில் மனக்கசப்புகள் உண்டாகலாம். பொருளாதாரத்தில் அபிவிருத்தி இருந்தாலும் செலவு செய்யும்போது கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சக ஊழியர்களின் தடங்கல்களைச் சந்திப்பீர்கள். அவர்களை எதிர்த்துக் கொள்ளாமல் பொருப்புடன் செயல்படவும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்தவும். இல்லாவிடில் செயல்கள் கண்டனத்திற்கு ஆளாகும்.

கலைத்துறையினர் தங்களின் வசியப் பேச்சினால் மற்றவர்களைக் கவருவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடலும் மனமும் பலப்படும்.

மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

பரிகாரம்:  துர்க்கையையும்  சிவபெருமானையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:19, 20.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அலைச்சல்கள் கூடும். செயல்களில் தடைகள் உண்டாகும். இருப்பினும் தடைகள் விலகி, முடிவு வெற்றிகரமாக இருக்கும். பெயரும் புகழும் உண்டாகும்.  மன அமைதி பெறுவீர்கள். தேக நலம் சிறப்படையும்.  சிலர் வீடு மனை வாங்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். வாடிக்கையாளர்களை கனிவான பேச்சினாலும் நேர்மையான நடத்தையாலும் கவர்வீர்கள். 

விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளையும் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் சகல காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அவர்களின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களையும் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவும்.  

பரிகாரம்: பெருமாள் தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,  21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மனதிலும் உடலிலும் புதிய தெளிவு தென்படும். அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். செயல்களை நீங்களே தனியாகச் செய்யத் தொடங்கும் நேரமிது. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த பகை விலகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் தென்பட்டாலும் புதிய முயற்சிகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய சிக்கல்கள் உருவாகலாம். 

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அரசாங்கத்திலும் கட்சியிலும் செல்வாக்கு கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பது தாமதமாகும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாக இருப்பதால் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் கருத்தாக இருக்கவும். தற்பெருமை பேசுவதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகரை தரிசித்து நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான காலமிது. குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தீயோர் நட்பினால் பணவிரயம், கௌரவக் குறைவு போன்றவை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிக்கவும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். விவசாயிகள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளைச் சுலபமாகச் செய்து முடிப்பார்கள்.  தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின்ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். சச்சரவு ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவும். 

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். 

மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெற்றோர், ஆசிரியரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: திங்கள்கிழமையன்று அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்:  19, 22. 

சந்திராஷ்டமம்:  18.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான காலமிது. குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தீயோர் நட்பினால் பணவிரயம், கௌரவக் குறைவு போன்றவை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிக்கவும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய  பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். விவசாயிகள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளைச் சுலபமாகச் செய்து முடிப்பார்கள்.  தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின்ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். சச்சரவு ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவும்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெற்றோர், ஆசிரியரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: திங்கள்கிழமையன்று அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்:  19, 22. 

சந்திராஷ்டமம்:  18.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். இதனால் மருத்துவச் செலவுகள் குறையும். முழங்கால் வலியால் அவதிப்பட்டவர்கள் நிவாரணம் அடைவர். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வீண் அலைச்சல்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக இருப்பார்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீராக வருமானத்தைக் காண்பார்கள். 

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். 

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்ல விதமாகப் பழகி அவர்களின் உதவியைப் பெறவும். 

கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள், மீண்டும் கையைத் தேடிவரும். 

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும்.  மாணவமணிகள் அதிகமாக உழைத்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழி(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)படவும்.  

அனுகூலமான தினங்கள்: 18, 23.  

சந்திராஷ்டமம்: 19, 20.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். உஷ்ண ஆதிக்க உபாதைகளுக்கும் வயிற்று வலிக்கும் ஆளாக நேரிடலாம். வெளியூர் பயணங்களில் அனுகூலங்களை எதிர்பார்க்க வேண்டாம். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் சில தடைகள் ஏற்படலாம். குத்தகை எடுப்பதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடி அடைவர். வருமானத்திற்கு எந்தக் குறைவும் வராது. 

பெண்மணிகளுக்கு வாக்குச் சாதுர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். மாணவமணிகள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: சுப்ரமண்யர் வழிபாடும் சூரிய வழிபாடும் சிறந்தது. 

அனுகூலமான தினங்கள்:  20, 21. 

சந்திராஷ்டமம்: 23,  24.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். உஷ்ண ஆதிக்க உபாதைகளுக்கும் வயிற்று வலிக்கும் ஆளாக நேரிடலாம். வெளியூர் பயணங்களில் அனுகூலங்களை எதிர்பார்க்க வேண்டாம். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். 

விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் சில தடைகள் ஏற்படலாம். குத்தகை எடுப்பதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடி அடைவர். வருமானத்திற்கு எந்தக் குறைவும் வராது. 

பெண்மணிகளுக்கு வாக்குச் சாதுர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். மாணவமணிகள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

பரிகாரம்: சுப்ரமண்யர் வழிபாடும் சூரிய வழிபாடும் சிறந்தது. 

அனுகூலமான தினங்கள்:  20, 21.  

சந்திராஷ்டமம்: 23,  24.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். எல்லா செயல்களும் நேர்த்தியாக முடியும். வாகன யோகம் உண்டாகும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பேச்சில் உஷ்ணமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வும் கிடைக்கும். 

வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க நினைப்பார்கள். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாக இருப்பதால் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கழனிகளை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகளைத் தாண்டி, புதிய சாதனைகளைச் செய்வீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். கணவரிடம் ஒற்றுமை குறையும்.  மாணவமணிகளுக்கு மதிப்பெணகள் குறையும். முயற்சிகளை கைவிட வேண்டாம்.

பரிகாரம்: சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 23,  24.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி உறவுகளில் சிறு மனக்கசப்புகள் உருவாகலாம். பேசும் நேரத்தில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்ல படியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் கொட்டும். உழைத்து மேலும் முன்னேற எண்ணுவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கடன்வாங்கி வேலைகளைச் செய்ய வேண்டாம். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிநடை போடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷமடைவர். 

மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடுமையாக உழைக்கவும். 

பரிகாரம்: திங்கள்கிழமையில் விநாயகரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 23.  

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com