தைப்பூசம்: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
தைப்பூசம்: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
முருகப் பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்குச் சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார் என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 25-இல் தை உத்திர வருஷாபிஷேகம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com