ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
சிறப்பு அலங்காரத்தில் ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி. 
சிறப்பு அலங்காரத்தில் ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி. 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோயிலில் குருபூஜை விழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 
நிகழாண்டு தை அமாவாசை திருவிழா வரும் 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக, 25 ஆம் தேதி மதியம் பழையகாயல் அருகே தாமிரவருணி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடத்திலிருந்து புனித நீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடங்கியதில் இருந்து 9 ஆம் நாள் திருவிழா வரை நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளல் 
நடைபெறும்.
பத்தாம் திருவிழாவான பிப். 4 ஆம் தேதி (தை அமாவாசை) பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் தரிசனமும், பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சி நடைபெறும். இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் சுவாமி கற்பக பொன் சப்பரத்தில் சிகப்பு சாத்தி தரிசனம் நடைபெறும்.
பதினோறாம் திருநாளான 5 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2 ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் மற்றும் பிற்பகல் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறும். மாலையில் ஏரல் சவுக்கை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சியும் நடைபெறும்.
பன்னிரெண்டாம் திருநாளான பிப். 6 ஆம் தேதி காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன மங்கள தரிசனமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com