தைப்பூசத்தையொட்டி களைக்கட்டிய திருச்செந்தூர்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான...
தைப்பூசத்தையொட்டி களைக்கட்டிய திருச்செந்தூர்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஷ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. 

தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தைப்பூத திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அறுபடை வீடுகளில் மட்டுமன்று உப கோயில்களான வடபழனி முருகன் கோயில், கந்தசாமி கோயில், ஆண்டாகுப்பம் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

விரதம் இருக்கும் முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com