கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் இன்று அங்குரார்ப்பணம்

கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் இன்று அங்குரார்ப்பணம்

கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி.. 

கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி இன்று அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. 

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோயில்களைக் கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் ரூ.22 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கோயிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீபாலங்கார மண்டபம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் இம்மாதம் நிறைவு பெற்று வரும் 27-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை கும்ப லக்னத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இன்று (ஜன.22)ஆம் தேதி அங்குரார்ப்பணம் எனப்படும் நவதானியங்களை முளைவிடும் உற்சவம், மாலை 6 மணி முதல் 9 மணி வரை ஆச்சார்ய ரூத்விகரணம், அங்குரார்ப்பணம், வேதாரம்பம் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.

ஜன.23-ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை யாகசாலை வாஸ்து, பஞ்சகவ்ய பிரசன்னம், ரக்ஷôபந்தனம், அகல்மஷப்ரயோசித்த ஹோமம், அக்ஷின்மோசனம், பஞ்சகவ்ய ஆதிவாசமும், மாலை 6 முதல் 8 மணிவரை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்ப ஆராதனை, ஹோமம், மகாபூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

ஜன.24-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், க்ஷீராதிவாசம், பூர்ணாஹுதி, மாலை 6 முதல் 8 மணி வரை ஹோமம், மகாபூர்ணாஹுதி நடைபெற உள்ளது.

ஜன.25-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், ஜலாதிவாசம், பூர்ணாஹுதி மதியம் 12 முதல் 2 மணி வரை பிம்பஸ்தானம், மாலை 6 முதல் 8 மணி வரை ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற உள்ளது.

ஜன.26-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 12 மணி வரை பிம்பவாஸ்து, நவகலச ஸ்தாபனம், சதுர்தச கலசஸ்தாபனம், ஹோமம், மகாபூர்ணாஹுதி மாலை 4 முதல் 6 மணி வரை மகாசாந்தி திருமஞ்சனம், மகாசாந்தி பூர்ணாஹுதி, இரவு 8 முதல் 10 மணி வரை ரக்ஷôபந்தனம், கும்பாராதனம், நிவேதனம், சயனாதிவாசம், ஹோத்ரம், சர்வதேவாரார்ச்சனை, ஹோமம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

ஜன.27-ஆம் தேதி காலை 4 முதல் 7 மணி வரை சுப்ரபாதம், கும்ப ஆராதனை, நிவேதனம், ஹோமம், மகாபூர்ணாஹுதி, காலை 7 முதல் 7.30 மணி வரை கும்பம், உற்சவமூர்த்திகள் ஊர்வலம், சந்நிதிகளில் சேர்ப்பு, அதன்பின் கும்ப லக்னத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து, காலை 9 முதல் 10.30 மணி வரை பிரம்மகோஷ, வேதசாத்துமுறை, கொடியேற்றம், அர்ச்சக பகுமானம், காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை நித்திய கைங்கரியம், மாலை 5.30 முதல் 6.30 மணி வரை உற்சவமூர்த்திகள் வீதியுலா, கொடியிறக்கம், மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நித்திய கைங்கரியம், 7.30 முதல் 8.30 மணி வரை சர்வதரிசனம், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவை உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com