சனிக்கிழமையில் நவக்கிரகத்தைச் சுற்றுபவர்களுக்கு மட்டும்!

நமது முன்னோர்கள் இயல்பாகவே மெய்ஞானத்தின் மூலமாகவும், விஞ்ஞானம் மூலமாகவும் நவக்கிரங்களை..
சனிக்கிழமையில் நவக்கிரகத்தைச் சுற்றுபவர்களுக்கு மட்டும்!

நமது முன்னோர்கள் இயல்பாகவே மெய்ஞானத்தின் மூலமாகவும், விஞ்ஞானம் மூலமாகவும் நவக்கிரங்களை ஆராய்ச்சி செய்து எத்தனைக் கிரகங்கள் இருக்கின்றது அந்தக் கிரகங்களின் நிறங்கள் என்ன? அந்தக் கிரகங்களை வழிபடுவதற்கு நாம் செய்ய வேண்டிய சூட்சமங்கள் என்ன? என்று அறிந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து அவை ஒரு கோயிலாக வைத்து நமக்கு வழிநடத்தினார்கள்.

அதைத் தான் ஒன்பது கிரகங்கள் என்று சொல்லக்கூடிய நவக்கிரங்கள். இந்த நவக்கிரங்களின் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். நவக்கிரங்களின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே வாழ்வில் நாம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். 

நவக்கிரங்களின் ஆசீர்வாதம் எப்படிப் பெறுவது? 

ஒன்பது கிரகங்களில் மற்ற கிரகங்களை விட சனிபகவானுக்கு வீரியம் அதிகம். சனியைப் போன்று கொடுப்பவரும் இல்லை, சனியைப் போன்று கெடுப்பவரும் இல்லை என்பர். அப்படிப்பட்ட சனிபகவானை சனிக்கிழமைகளில் எந்த நேரத்தில் நாம் வழிபடுகின்றோம் என்பது தான் மிகவும் முக்கியம். 

நவக்கிரங்களை சுற்றுவதற்கு சரியான நேரம் என்றால் அது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை தான். அந்த நேரத்தில் சுற்றி வந்தால் மட்டுமே நவக்கிரங்களின் பூரண ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். ஏனெனில் இது நவக்கிரகங்களின் சூட்சம ஓரை என்றும் சூட்சம முகூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. 

கோயிலில் உள்ள அனைத்துத் தெய்வத்தையும் வழிபட்ட பின்பு, கடைசியில் நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். அவ்வாறு சுற்றும்போது நவக்கிரங்களின் ஸ்லோகத்தை மனதில் சொல்லிக்கொண்டே சுற்றலாம். நவக்கிரக மந்திரம் தெரியாதவர்கள் ஒவ்வொரு கிரகத்தையும் மனதில் நிறுத்திக்கொண்டு சூரியனே, சந்திரனே, புதனே, சனியை. குருவே என்று சொல்லி வழிபடலாம். 

இந்த ஓரைப்படி நவக்கிரகங்களைச் சுற்றினால் நவக்கிரகங்களின் ஆசீர்வாதம், அதாவது சனிபகவானின் ஆசீர்வாதம் கட்டாயம் நமக்குக் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com