மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியர் வழிபாடு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எழுச்சூர் கிராமத்தில் உலகில் காணவியலாத..
மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியர் வழிபாடு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எழுச்சூர் கிராமத்தில் உலகில் காணவியலாத அதி அற்புதமான வடிவமைப்பில் மும்மூர்த்திகளுடன் சப்தகன்னியர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேப்பமரத்தடியில் வீற்றிருந்து அருளுகின்றனர்.

ஒரே கருங்கல் பலகையில் மஹாவிஷ்ணு கருட வாகனத்தில் மஹாலட்சுமியுடனும், பிரம்மதேவர் அன்ன வாகனத்தில் சரஸ்வதியுடனும், ரிஷப வாகனத்தில் பார்வதி பரமேஸ்வரன் வீற்றிருந்து சப்த கன்னியர்களுக்கு ஆசீர்வதிக்கும் காட்சி உலகில் வேறெங்கும் காணவியலாத புடைப்புச் சிற்பமாக விளங்குகிறது. சப்த கன்னியர்கள் தங்கள் கைகளில் தாமரை மொட்டுகளுடன் நின்ற கோலத்தில் அருளுகின்றனர். 

சப்த கன்னியர்கள்

தேவகன்னி - அம்புஜா, பத்தமகன்னி - சுந்தரி, சிந்துகன்னி - பத்மினி, அகஜா கன்னி - அஸ்த மாலினீ, வனகன்னி - காமினி சக்தி, சுமதி கன்னி - வாமினி சக்தி, பட்டாரத்து கன்னி - விருஷப சக்தி

சப்த கன்னியர்கள் தங்களுக்குள் வேற்றுமை ஏற்றப்பட்டதின் காரணமாக அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அதனை உறுதி செய்ய வேண்டிப் பல தலங்களுக்கும் சென்று தீர்வு கிடைக்கவில்லை. கடைசியில் எழுச்சூர் கிராமத்தில் உள்ள ஏரிக்குள் சப்த கன்னியர்கள் நீராடி விட்டு இறைவனை வேண்டி நிற்கையில் ரிஷப வாகனத்தில் ருத்ரன் காட்சியளித்தார். 

உங்களுக்குள் போட்டி எழக்கூடாது என்றும் நீங்கள் அனைவரும் சமமான அந்தஸ்தைப் பெற்றவர்கள் என்று கூறி அவர்களிடத்தும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதோடு பார்வதி தேவியை வரவழைத்து ரிஷப வாகனத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு மஹாலட்சுமிடன் மஹாவிஷ்ணு கருட வாகனத்திலும், சரஸ்வதிதேவி பிரம்மதேவருடன் அன்ன வாகனத்தில் வீற்றிருந்தும் சப்த கன்னியருக்கு அருளாசி வழங்கினர்.

இத்தலத்தை வணங்குவோருக்குத் திருமணத்தடைகள் நீங்கும், மகப்பேறு பாக்கியம் கிட்டும், இங்குள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படும். சப்த கன்னியரை வணங்கிய பின்னர் எழுச்சூரில் புராதனமான திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகி சமேத ஸ்ரீ நல்லிணக்கேஸ்வரரை வணங்கினால் முழுமையான பலன் கிட்டும்.

எழுச்சூரில் கிராம தேவதை கோயில்களான வேம்புலியம்மன், செல்லியம்மன், மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியர் திருக்கோயில்களுக்கு சுபஸ்ரீ விஹாரி ஆண்டு ஆனி மாதம் 18-ம் தேதி 03.07.2019 யாகசாலை பூஜைகள் தொடங்கி ஆனி மாதம் 19-ம் தேதி 04.07.2019 வியாழக்கிழமை காலை துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 10.45 மணிக்குமேல் 11.53 மணிக்குள் ஜீரணோர்த்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு இறையருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

- எழுச்சூர். க. கிருஷ்ணகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com