சுடச்சுட

    
    Weekly horoscope in tamil

     

    12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூலை 5 - ஜூலை 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

    மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    பணவரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். மனக்கலலைகளால்  மற்ற வேலைகளில் இடையூறுகள் உண்டாகலாம். மனதை ஒரு நிலைப்படுத்தும் முயற்சிகளை செய்யவும். அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். குறைந்த முதலீட்டில் தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கலாம். விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலன் கிட்டும். 

    அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மேலிடப் பார்வை உங்கள் மீது விழுந்து அதனால் பெரும் புகழை அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். கலைஞர்களிடம் எதிர்பார்த்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் இன்பங்களைக் காண்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். 

    மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கூடும்.

    பரிகாரம்: வெள்ளியன்று புவனேஸ்வரி அம்பாளை விளக்கேற்றி வழிபடவும். 

    அனுகூலமான தினங்கள்: 5, 6.

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    உங்கள் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். பூர்வீகச் சொத்து வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும், மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். வர்த்தகர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். 

    அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் பலனை அடைய முடியும். 

    பெண்மணிகளுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிட்டும்.  மற்றவர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படிக்கவும்.

    பரிகாரம்:  பெருமாளையும் தாயாரையும் வணங்கி நலம் பெறவும். 

    அனுகூலமான தினங்கள்: 6, 7. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். பதவி  உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

    வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிக்கல்கள் விலகும். அந்நியரிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.  கோதுமை விவசாயம் செய்பவர்கள் குறைவான பலன்களைப் பெறுவார்கள். 

    அரசியல்வாதிகள் தம் முயற்சிகளுக்குத் தகுந்த பதவி உயர்வுகளைப் பெறுவார்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவதால் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு முக்கிய ஒப்பந்தங்களைப் பெறும் காலமாகும். எதிர்பார்த்த வருமானமுண்டு. பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பார்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். 

    பரிகாரம்:  ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

    அனுகூலமான தினங்கள்: 10, 11. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் காரியங்களை தெளிவான மனநிலையோடு செய்வீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மாற்றங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளை ஒத்திப் போடவும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் சிறக்கும். விளைபொருள்களின்  விற்பனையில் லாபம் அதிகரிக்கும். 

    அரசியல்வாதிகள் வேலைகளை ஒழுங்காகச் செய்வார்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கட்சி மேலிடத்தின் கரிசனப்பார்வை உங்கள் மீது விழாது. 

    கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் கடமைகளில் சலிப்பும் ஏற்படும். மாணவமணிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

    பரிகாரம்:  ஞாயிறன்று சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும். 

    அனுகூலமான தினங்கள்: 6,  10. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

    திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு  கிடைக்கும்.  உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும்.

    உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி பொருள்களின் விற்பனையை அதிகரிப்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபம் தொடரும். 

    அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தங்களின் திறமைக்குத் தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

    பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.  அதனால் கவனம் தேவை.

    பரிகாரம்: ஞாயிறன்று சூரியனையும் புதனன்று திருவேங்கடநாதனையும் தரிசிக்கவும். 

    அனுகூலமான தினங்கள்: 7,  10. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

    திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். ஆனாலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நலம் சீராக இருக்கும், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்மசிந்தனைகள் மேலோங்கும்.

    உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்கவும். பணிகளை ஒத்திப்போடும் எண்ணத்தைத் தவிர்க்கவும். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்தவும். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். கூடுதலாக உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.  கால்நடைகளுக்கு சிறு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். 

    அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை  போடுவர். சாதுர்யமாக பதிலடி கொடுத்து அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப்போடவும். 

    பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சிறு குழப்பங்களும் கணவரின் உடல்நலத்தில் சிறு குறைகளும் ஏற்படும். மாணவமணிகள் ஆசிரியரிடம் நற்பெயர் எடுப்பார்கள். 

    பரிகாரம்: சனியன்று சனிபகவானையும் புதனன்று பெருமாளையும் வணங்கவும். 

    அனுகூலமான தினங்கள்: 10,  11. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

    பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். 

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்காது. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொள் முதல் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நல்லபடியாக முடியும். பழைய கடன்கள் வசூலாகும். 

    அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் அனுசரணையாக இருந்து  அவர்களின் உதவியைப் பெறவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

    பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் சற்றுக்கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

    பரிகாரம்:  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றவும். அனுகூலமான தினங்கள்: 5,  9. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

    எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் திருப்பணி போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் அன்பு, பாசத்தோடு பழகுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அலுவலக ஊழியர்களிடமும் வேலைகளிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். 
    வியாபாரிகளுக்கு வருமானம்  திருப்திகரமாக இருக்கும், மேலும் வளர்ச்சி  அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும்.  கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். 

    அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் 
    தொழிலில் புதிய வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது இரண்டும் கலந்தே நடக்கும். குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலத்திட்டங்களுக்கு உரிய காலமாகும். 

    பரிகாரம்: சிவதரிசனம் உகந்தது. நாகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யவும். 

    அனுகூலமான தினங்கள்: 9, 11. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

    உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். திட்டமிட்ட பணிகள் சாதகமாக முடியும். எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். உயர்ந்தவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுக நிலை ஏற்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து மான்யத்துடன் கடன் கிடைக்கும். 

    அரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறையும். திறமைகள் குறையாது. புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். 

    பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையுடன் பழகுவார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

    பரிகாரம்: வியாழனன்று குருதட்சிணாமூர்த்தியை மலர் மாலை சாற்றி வழிபடவும். 

    அனுகூலமான தினங்கள்: 8, 11. 

    சந்திராஷ்டமம்: 5.

    {pagination-pagination}
    மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

    முயற்சிகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வெகுநாள் நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிட்டும். தாயாரின் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டி வரும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும் இருக்கும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளைத் தேடி பல வகையிலும் லாபம் வரும். வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த சில சலுகைகளை வழங்குவீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைப்பொருள்களை விற்பனை செய்வார்கள். 

    அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியாகப் பலனளிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான காலமாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். 

    பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

    பரிகாரம்:  திங்களன்று பராசக்தியையும் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரையும் வழிபடவும். 

    அனுகூலமான தினங்கள்: 5, 9. 

    சந்திராஷ்டமம்: 6, 7.

    {pagination-pagination}

    கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

    கவனமாக இருக்க வேண்டிய காலமிது. தன்னம்பிக்கை குறையும். உடல்நலத்திலும் அக்கறை காட்டவும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார நிலைமை சீராக இருக்காது. 

    உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சீராகும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். புதிய முலீடுகளில் ஈடுபட வேண்டாம்.  விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம்.  

    அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்துவந்த தடைகள் நீங்கும். கட்சி மேலிடத்தின் ஆசி கிடைக்கும். தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

    கலைத்துறையினருக்கு சக கலைஞர் மூலம் நல்ல வாய்ப்பு  தேடி வரும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.  தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவார்கள்.

    மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

    பரிகாரம்: குலதெய்வ வழிபாடு முக்கியம். ஸ்ரீரங்கம் நங்கநாதரை வழிபட்டு வரவும். 

    அனுகூலமான தினங்கள்: 5, 7. 

    சந்திராஷ்டமம்: 8, 9.

    {pagination-pagination}
    மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

    திட்டமிட்ட காரியங்கள் சிறிது சிரமத்துடன் முடியும். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும். கடன் தொல்லைகள் ஏற்படாது. அடுத்தவர்களுக்கு  ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.  

    உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சிறிய அளவு முயற்சிகளில் நல்ல பலனை அடைவார்கள். வியாபாரிகள் வருமானத்தைத் தேடிச் செல்வார்கள். புதிய முதலீடுகளில் அக்கறை காட்டவும். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும், தானியப் பொருள் உற்பத்தியில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். 

    அரசியல்வாதிகளுக்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். கட்சியில் எவரிடமும் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். 
    கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சக கலைஞர்களும் உதவ முன்வருவார்கள். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். அநாவசியமான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதும் நல்லது. 

    பரிகாரம்:  ஞாயிறன்று சூரிய வழிபாடு செய்து தேக ஆரோக்கியத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள். 

    அனுகூலமான தினங்கள்: 5, 8. 

    சந்திராஷ்டமம்: 10,  11.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai