சுடச்சுட

    

    ஜூலை 16-ல் திருப்பதி செல்பவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் ரத்து! ஏன்?

    Published on : 09th July 2019 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tirupathi


    தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.

    ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட உள்ளது.

    மேலும் பௌர்ணமி தினமான அன்று மாலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. எனவே அன்று காலை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 

    எனவே, நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தர்ம தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன் ஆகியவை 16-ஆம் தேதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai