சுடச்சுட

    

    சந்திர கிரகணம்: ஜூலை 16-ல் ராமநாதசுவாமி கோயிலில் நள்ளிரவு தீர்த்தவாரி

    By DIN  |   Published on : 11th July 2019 10:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rameswaramtemple

     

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்  ஜூலை 16-ஆம் தேதி சந்திர கிரஹணத்தையொட்டி நள்ளிரவு தீர்த்தவாரி நடைபெறும் என இணை ஆணையர் எஸ்.கல்யாணி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 1.33 மணி முதல் அதிகாலை 4.32 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுகிறது. இதனையடுத்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 16 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு அன்று நள்ளிரவு 1.33 மணிக்கு தீர்த்தவாரிக்காக சுவாமி புறப்பாடகி, அதிகாலை 3.02 மணிக்கு அக்னி தீர்த்தத்தில், தீர்த்தவாரி நடைபெறும்.]

    17 ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோயில்  நடை திறந்து கிரஹணாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பிறகு ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தள் பூஜைகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai