சுடச்சுட

  
  vekkaliamman

   

  சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் ஜூலை 12 வெள்ளிக்கிழமையன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. 

  இவ்விழா கடந்த ஜூலை 25 ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 

  அதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) காலை சிவகங்கை தெப்பக்குளத்திலிருந்து பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

  அன்று மாலை பூக்கரகம் எடுத்து கோயிலில் இறக்கி வைக்கப்பட்டது. அதன்பின்னர் நகர் முத்தரையர் சங்க கட்டடத்திலிருந்து முளைப்பாரிகளை பெண்கள் சுமந்து நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பின் நேரு பஜாரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் இறக்கி வைத்தனர்.

  மீண்டும் புதன்கிழமை காலை கோயிலிலிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் பழைய மருத்துவமனை சாலை, இளையான்குடி சாலை சந்திப்பு, இந்திரா நகர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை வழியாக வாணியங்குடியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அதே பகுதியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

  தொடர்ந்து, முக்கிய விழாவான பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும். அன்று மாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி மாலை விளக்கு பூஜையுடன் இந்தாண்டுக்கான பூச்சொரிதல் திருவிழா நிறைவு பெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai