சந்திர கிரகணம்: ஜூலை 16-ல் ராமநாதசுவாமி கோயிலில் நள்ளிரவு தீர்த்தவாரி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்  ஜூலை16 ஆம் தேதி சந்திர கிரஹணத்தையொட்டி..
சந்திர கிரகணம்: ஜூலை 16-ல் ராமநாதசுவாமி கோயிலில் நள்ளிரவு தீர்த்தவாரி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்  ஜூலை 16-ஆம் தேதி சந்திர கிரஹணத்தையொட்டி நள்ளிரவு தீர்த்தவாரி நடைபெறும் என இணை ஆணையர் எஸ்.கல்யாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 1.33 மணி முதல் அதிகாலை 4.32 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுகிறது. இதனையடுத்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 16 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு அன்று நள்ளிரவு 1.33 மணிக்கு தீர்த்தவாரிக்காக சுவாமி புறப்பாடகி, அதிகாலை 3.02 மணிக்கு அக்னி தீர்த்தத்தில், தீர்த்தவாரி நடைபெறும்.]

17 ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோயில்  நடை திறந்து கிரஹணாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பிறகு ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தள் பூஜைகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com