திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் இன்று (ஜூலை 11) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு இன்று நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
காலை 9 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.