Enable Javscript for better performance
இந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?- Dinamani

சுடச்சுட

  
  astrology

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூலை 12 - ஜூலை 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பலன் அமையும். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். உங்களின் முடிவுகளை நடுநிலையுடன் எடுத்து அனைவரின் மதிப்புக்குரியவராக இருப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகி பொருளாதார நிலைமை சீரடையும்.

  அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். 

  கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும் பணமும் கிடைக்கும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும். 

  பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். 

  பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அளித்து வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16.

  சந்திராஷ்டமம்: 12, 13, 14.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செயல்கள் வெற்றியில் முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை உயரும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மந்த நிலை விலகும். கூட்டு வியாபாரம் அனுகூலமாக இருக்கும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பலன் பெறவும். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

  அரசியல்வாதிகள் புதிய திட்டங்கள் தீட்ட நாடிச் செல்வர். கௌரவம் உயரும். தடைப்பட்டிருந்த செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் உதவ முன்வருவார்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்லுங்கள். 

  பெண்மணிகளுக்கு இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.   மாணவ மணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடக்கவும்.

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு  அருகம்புல் மாலை அணிவித்து வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 14. 

  சந்திராஷ்டமம்: 15, 16 .

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  எல்லா செயல்களிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சிக்கலான சூழ்நிலையிலும் மீண்டு வருவீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். 

  உத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும்.  உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை. 
  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாகவே இருக்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முனைவீர்கள். விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுப்பது நல்லது.

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றியடைவீர்கள். அதனால் கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வார்கள்.  

  பெண்மணிகள் உடல் நலனில் கவனம் செலுத்தவும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டு பிரச்னைகளைக் குறைக்கவும்.  மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி பெறுவர்.

  பரிகாரம்:  துர்க்கையையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வருதல் நலம். 

  அனுகூலமான தினங்கள்: 12,  15. 

  சந்திராஷ்டமம்: 17, 18.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  சாதகமான காலம். திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே  அமையும். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். அந்தஸ்தான மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். சிலருக்குப் பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.   

  அரசியல்வாதிகள் இந்த காலகட்டத்தில் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிடத்தின் அவமதிப்புகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் திறமைக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவீர்கள். லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மாணவமணிகள் முன்கூட்டியே கல்வியில் அக்கறை காட்டவும். தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளலாம்.

  பரிகாரம்: "நமசிவாய' ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  அனுகூலமான காலம். பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் தென்படும். எடுத்த காரியங்கள் மெதுவாகத்தான் வெற்றியைக் கொடுக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளும் பக்கபலமாக இருப்பார்கள்.வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை நன்கு யோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும்.  புதிய பயிர் உற்பத்தி வேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேரும். உடல்சோர்வைப் பாராட்டாமல் கட்சிப்பணி செய்யவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். பணவரவு சரளமாக இருக்கும். 
  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகால திட்டங்களுக்கு இது உகந்த காலம்.

  பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை தரிசனம் செய்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 15.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். உடல் சோர்வடையும். வார இறுதியில் இத்தன்மையில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் தென்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்தைச் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முயற்சிகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தவும். விவசாயிகள் செய்ய நினைத்த வேலைகளைச் செய்து முடிப்பார்கள். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவர். 

  அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சியில் உயர் பதவிகளையும் பெறுவார்கள். கலைத்துறையினரின்ஆற்றல் அதிகரிக்கும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

  பரிகாரம்: புதனன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 16. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  பணம் பல வகையிலும் தேடி வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த இது சரியான காலமே. பேச்சுத் திறமையால் நன்மைகள் உண்டாகும். உங்கள் துறையில் புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சில இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் வெற்றியடையும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கிடைத்த லாபத்தைச் சரியாக பங்கிட்டுக் கொடுத்து கூட்டாளிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 

  விவசாயிகள் மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.  

  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் காரியங்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.  கட்சியில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகரிகளின் ஆதரவும் குறைந்தே காணப்படும். 

  பெண்மணிகள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

  பரிகாரம்: வியாழனன்று குரு தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வண்ண மலர்களால் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 16. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க முனைவீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் சீரான இயக்கத்தைக் காண்பார்கள். பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளின் மனக்கசப்புகள் நீங்கி நட்போடு நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். கையிலுள்ள பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். 

  அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். நண்பர்களின் உதவி தாராளமாகக் கிடைக்கும். 

  பெண்மணிகள் மனம் அலைபாய்வதைத் தவிர்க்கவும்.  இல்லத்தில் அமைதியைக் காண்பார்கள்.  மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

  பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி தினங்களில் செந்திலாண்டவரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 16.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  அலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் அதிகரிக்கும். ஆனாலும் மாற்றம் உண்டு. முன்காலத்தில் உங்களுக்குக் கெடுதல் செய்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகைமை பாராட்ட வேண்டாம்.

  உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

  அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தடைகள் உண்டாகலாம். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடு தோன்றும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாணவமணிகள்கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  கவனமாக இருக்க வேண்டிய வாரம். நிதானத்துடனும் பொறுமையுடனும் இருந்து செயலாற்றி வெற்றி  காண்பீர்கள். புதிய முயக்சிகளைத் தொடங்கும் முன்பு நன்கு யோசிக்கவும். உறவினர்கள் உதவிகரமாக இருக்ப்பார்கள். 

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு மந்த நிலை நிலவும். தொடரும் பிரச்னைகளுக்கு சாதுர்யத்துடன் செயல்பட்டு நிரந்தரத் தீர்வு காணவும். விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

  அரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்பிற்கு தற்போது பலன் கிடைக்கும். கட்சிப்பிரசாரத்திற்காக நேரம் ஒதுக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். 
  கலைத்துறையினர் உழைப்பிற்கு தகுந்த பாராட்டுகள் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டிவரும். ஆசிரியர்களின் ஆதரவினால் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபடுவீர்கள். 

  பரிகாரம்:  ராமபக்த அனுமனை "ராம் ராம்' என்று ஜபித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 17, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}


  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  பணப்புழக்கம் அதிகமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள்.  திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நன்கு முடியும். சிலருக்கு உத்தியோக விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவார்கள். கால்நடைகளை கவனத்துடன் பராமரியுங்கள்.

  அரசியல்வாதிகள் செய்ய எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். மேலிடத்தின் கவனத்தைக் கவருவீர்கள். முக்கியப் பொறுப்புகளும் கைகூடும். கலைத்துறையினருக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து கல்வியில் முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் கோரிக்கைகள் நிறைவேறும். 

  பரிகாரம்: சனீஸ்வரபகவானுக்கு நீல மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  பொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் செயல்களை மாற்றி அமைத்து வெற்றியடைவீர்கள். தீயோர்ச் சேர்க்கையைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீராகவே இருக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். போட்டிகளையும் சமாளிக்கலாம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். 

  அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் வளரும். கட்சிப்பிரச்னைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். 

  பெண்மணிகள் கணவருடனும் மற்றும் குடும்பத்தாருடனும் நல்லுறவைக் காண்பீர்கள். மாணவமணிகள் பெற்றோர் சொல்கேட்டு நடந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உள்ளரங்கு விளையாட்டுகள் ஏற்றது.

  பரிகாரம்:  சனியன்று பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai