Enable Javscript for better performance
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.58 கோடி- Dinamani

சுடச்சுட

    

    ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.58 கோடி

    By DIN  |   Published on : 13th July 2019 02:21 AM  |   அ+அ அ-   |    |  

    ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.4.58 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
    ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.58 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரூ.72.25 லட்சம் நன்கொடை 
    ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம்,  ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1.25 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.26 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என ரூ.72.25 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

    71,035 பேர் தரிசனம்
     ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 71,035 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,478 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
    வெள்ளிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள காத்திருப்பு அறைகள் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணிநேரத்திற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர். 
    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 11,995 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 5,296 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18,169 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 1,294 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 3,098 பக்தர்களும் வியாழக்கிழமை தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

    சோதனைச் சாவடி வசூல் 
    அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 85,313 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனர்.
     9879 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.09 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.12,970 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp