Enable Javscript for better performance
தேவஸ்தானத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு: விஐபி தரிசனம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தேவஸ்தானத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு: விஐபி தரிசனம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 13th July 2019 02:22 AM  |   அ+அ அ-   |    |  


    திருப்பதி தேவஸ்தானத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் விஐபி-க்களுக்கான தரிசனம் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேவஸ்தானத்துக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    தேவஸ்தானம் நிர்வகிக்கும் ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் எல்-1, எல்-2, எல்-3 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்து, கோயிலுக்குள் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று ஹைதராபாதைச் சேர்ந்த உமேஷ் சந்திரா என்ற பக்தர் கடந்த 3 நாள்களுக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
    விஐபி தரிசனம் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது? இதுகுறித்து தேவஸ்தான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இதுகுறித்த அரசாணை அல்லது வழிமுறைகள் ஏதாவது ஆந்திர அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளதா? கடவுளின் முன் அனைத்து பக்தர்களும் சமம். கோயிலில் இறைவழிபாடு செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுவானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழலில் பிரசித்தி பெற்ற திருமலையில் விஐபி தரிசனத்தை அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 
    இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், திருமலையில் அமல்படுத்தி வரும் விஐபி தரிசனம் குறித்த முழு விவரங்களையும் தேவஸ்தான நிலைக்குழுவும் ஆந்திர அரசுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp