3-ஆவது முறையாக காவி நிறப் பட்டாடையில் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவின் 12-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார். 
12-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.
12-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.


அத்திவரதர் பெருவிழாவின் 12-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார். 
அத்திவரதர் பெருவிழாவின் 12-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திரளான பக்தர்கள் வரதர் கோயிலுக்கு அதிகாலையிலே வந்தடைந்தனர். மாடவீதிகளில் நெடு நேரம் வரிசையில் நின்று கிழக்கு கோபுரத்துக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தனர். 4.30 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் தேசிகர் சந்நிதிகள் வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் வஸந்த மண்டபம் வரை காத்திருந்தினர். 
3-ஆவது முறையாக காவி நிறப்பட்டாடை: அத்திவரதருக்கு காவி நிறப்பட்டாடையும், அடர் ஊதா நிற அங்க வஸ்திரம் அணிவித்து மலர்கள், துளசி ஆகியவற்றில் அலங்கரித்தனர். தொடர்ந்து, நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.    
சுமார் 1.30 மணிநேரம் தரிசனம் நிறுத்தி வைப்பு :அத்திவரதரை காண குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 2.45-க்கு வரதர் கோயிலுக்கு வருகை புரிந்தார். இதற்காக, பொதுமக்கள் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 3.30 மணிக்கு குடியரசுத் தலைவர் தரிசனம் முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து, மாலை 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
தரிசனத்துக்கு 5.30 மணிநேரம்: அத்திவரதரை காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வந்த பக்தர்கள் அதிகபட்சமாக 5.30 மணிநேரத்திலும், குறைந்த பட்சம் 2 மணிநேரத்திலும் தரிசனம் செய்தனர். 
போலி அனுமதிச் சீட்டு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
அத்திவரதரைக் காண நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் முக்கியஸ்தர்கள் வரிசையிலும் அதிகரித்தவாறு உள்ளது. அவ்வாறு வரும் பெரும்பாலானோர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதிச் சீட்டை காண்பித்து க்யூ.ஆர். குறியீடு பதிவு செய்த பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில், கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு அனுமதிச் சீட்டை அதேபோல் நகல் எடுத்து சிலர் போலீஸாரிடம் காண்பித்து முக்கியஸ்தர்கள் வரிசையில் நுழைய முயன்றனர். 


அவர்களை தடுத்து நிறுத்தி க்யூ.ஆர். குறியீட்டை சோதனை செய்தபோது அது போலி அனுமதிச் சீட்டு எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலியாக அனுமதிச் சீட்டு எடுத்து வருவோர் எவரேனும் கண்டறியப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், பக்தர்கள் வெளியில் அதிக விலை கொடுத்தும் அனுமதிச் சீட்டு பெறவேண்டாம். முறையாக மாவட்ட நிர்வாகம் வழங்கும் அனுமதிச் சீட்டு (டோனர் பாஸ்) வைத்திருப்போரே முக்கியஸ்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் பா.பொன்னையா எச்சரித்துள்ளார். 

முக்கியஸ்தர்கள் தரிசனம்
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் குடியரசுத் தலைவர்...
அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தார்.   
அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள்கள் பயணமாக தமிழகம் வந்தார். புதுதில்லியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் தனி விமானத்தில் புறப்பட்ட அவர் சென்னைக்கு வந்து, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.45-க்கு காஞ்சிபுரம் வந்தடைந்தார். 
அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
பிற்பகல் 3 மணிக்கு கார் மூலம் வரதர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்தடைந்தார். 

வஸந்த மண்டபத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்.
வஸந்த மண்டபத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்.


அங்கு அவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் பா.பொன்னையா, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 
பின்னர், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரை கோயில் பட்டாச்சாரியார்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக அழைத்துச் சென்றனர். வஸந்த மண்டப வாசலில் குடியரசுத் தலைவருக்கு கோயில் சார்பாக கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 
வஸந்த மண்டபத்தில் சயனக் கோலத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை மாலை 3.15 மணிக்கு குடியரசுத் தலைவர் தரிசனம் செய்தார். 
அவருக்கு பட்டாச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிரசாதம், அத்திவரதரின் பழைய, புதிய புகைப்படங்களை பரிசாக வழங்கினர். 
சுமார் 10 நிமிடங்கள் தரிசனம் செய்த குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கோயிலிலிருந்து 3.30 மணிக்கு வெளியே வந்தனர். 
மீண்டும் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர், அங்கிருந்து பொதுமக்களிடம் கையசைத்து வாழ்த்து தெரிவித்த பிறகு 4 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். 
வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், சார்-ஆட்சியர் சரவணன், மாவட்ட எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அறநிலையத்துறையினர், முப்படைப் பிரதிநிதிகள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
நிகழ்வில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் மூன்று அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com