இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

இந்திய வானிலை ஆராய்ச்சியை சமஸ்கிருதத்தில் ஜோதிஷம் என்பர். சுமார் 8000 ஆண்டுகளுக்கு..
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

இந்திய வானிலை ஆராய்ச்சியை சமஸ்கிருதத்தில் ஜோதிஷம் என்பர். சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்திய கண்டத்தில் கோள்களை ஆராயும் தன்மை இருந்துள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் யவனேஸ்வரா என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த ஜோதிஷத்தை ஆராய்ச்சிக்காக ஆர்யபட்டா என்ற நம் இந்திய விஞ்ஞானி எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் 300 வருட காலக்கணக்கு சிதைந்து விட்டதைக் கண்டார். 

பின்னர் வந்த வராஹமிகிரர் இதனை பஞ்சசித்தாந்திகா என்று வரையறுத்து கொடுத்தார். இந்திய ஜோதிட சாஸ்திரம், 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டில் ப்ருஹத் பராசரர் என்பவரால் ஹோர சாஸ்த்ரா மற்றும் கல்யாணவர்மா என்பவரால் சாராவாலி என்பன, பல பிரிவுகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. இப்போது புழக்கத்தில் உள்ளது இவைகளே. பின்னாளில் வந்த பலர் இதனை விரிவுபடுத்தியுள்ளனர்.

சூரியன் மற்றும் இப்பூவுலகிற்கு இடையே சரியாக ஒரு நேர்கோட்டில் வந்து சந்திரன் கடந்து செல்லும் நாளே சந்திர கிரகணம் என நம் முன்னோர்கள் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்துள்ளார்கள். கிரகணத்தினால் உண்டாகும் தாக்கத்தால் பூமியில் ஏற்படும் விளைவுகள் சமமாக (neutral) இருப்பதால் நாம் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதன் பலன் பன்மடங்காய் பெருகி நமக்குக் கிடைப்பதாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். 

இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமாவது நன்மையே செய்ய நம்மைத் தூண்டுகிறார்கள். ஏனெனில் இந்த நேரத்தில், நம் நாடி நரம்புகளில் ரத்த ஒட்டம் தன் சமநிலையைத் தாண்டி அதிகரிப்பதால் அனைவரும், குறிப்பாக கர்ப்பவதிகள் வெளியில் வராமல் தெய்வ சிந்தனையுடன் சாந்தமாய் இருக்கக் கூறியுள்ளார்கள். 

ஜோதிட வல்லுநர்களோ சந்திரன் குறுக்கே வருவதால் சூரியன் சில விநாடிகள் மறைக்கப்படுவதால், இந்த கிரகணம் இயற்கையை மட்டுமின்றி மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கின்றது என்கின்றனர். இந்த தமிழ் விகாரி வருடம் 5 கிரகணங்கள் வருகின்றது. இதில் 3 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் ஆகும். சந்திர கிரகணம் அனேகமாக முழுநிலவன்று தான் வரும். 

இந்தியாவில் இந்த வருடம் இது தெளிவாகத் தெரியாது என நம் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனை முதன்முதலில் ப்ரான்சிஸ் பெய்லி என்ற வானிலை ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து இதற்கு சோலார் (சூரியன்) மற்றும் லூநார் (சந்திரன்) எக்லிப்ஸ் (eclipse) எனப் பெயரிட்டார். பர்ஸியன் புகைப்படக் கலைஞர் பெர்கோவாஸ்கி என்பவர் இந்த நிகழ்வை முதன்முதலில் புகைப்படமெடுத்து வெளியிட்டார். 

தமிழ் ஆனி மாதம் 31ஆம் தேதி (ஜூலை 16, ஜூலை 17, 2019) செவ்வாய் அன்று இரவு 01:32 பிடிக்கப்பட்டு, பின்னிரவு 03:00 மணிக்கு மத்திம நிலைக்கு வந்து 04:30 மணிக்கு கடந்துவிடுகிறது. 3:00 மணிக்கு ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்வதால் பித்ருக்களின் பரிபூரண ஆசி கிட்டும். பின் 04:30 மணிக்கு ஒருமுறை சுத்த ஸ்னானம் செய்யவேண்டும். 

கார்த்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோண நட்சத்திரக்காரர்கள் பீடா பரிகாரமாக அதற்கான மந்திரங்கள் எழுதப்பட்ட பட்டையை நெற்றியில் கட்டிக்கொண்டு இதற்கு உகந்த தானங்களைச் செய்வது சாலச்சிறந்தது.

மறுநாள் 17.7.2019 அன்று ஆடி மாதம் பிறக்கிறது; இன்றிலிருந்து அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு மார்கழி கடைசி வரை தட்சிணாயன புண்ணியகாலம் ஆகும். 

இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

யோஸௌ வஜ்ரதரோதேவ: நக்ஷத்ரானாம் ப்ரபுர்மத |

ஸஹஸ்ர நயன: சந்த்ர: க்ரஹபீடாம் வ்யபோஹது ||

- ஆன்மீக எழுத்தாளர் எஸ். எஸ். சீதாராமன்

மொபைல்: 94441 51068

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com