ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதிக்கு வஸ்திரங்கள் அனுப்பிவைப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலிருந்து ஆனி வார ஆஸ்தான தினத்தையொட்டி
ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதிக்கு வஸ்திரங்கள் அனுப்பிவைப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலிருந்து ஆனி வார ஆஸ்தான தினத்தையொட்டி திருப்பதி வேங்கடமுடையானுக்கு செவ்வாய்க்கிழமை வஸ்திர மரியாதை பொருள்கள் கொண்டு செல்லபட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் மீது  முஸ்லிம்கள்படையெடுப்பின் போது அழகிய மணவாளப்பெருமாளை பாதுகாப்பாக திருப்பதி திருமலையில் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டது. 

இதனை நினைவு கூரும்விதமாக திருப்பதி மலையில் இன்றும் ஸ்ரீரங்கநாதருக்கான இடம் இருப்பது குறிப்பிடதக்கது. ஸ்ரீரங்கத்திற்கும், திருப்பதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸ்ரீரங்கநாதர் திருப்பதி மலையில் எழுந்தருளியிருந்ததை நினைவு கூரும்வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான கைசிக ஏகாதசி தினத்தன்று திருப்பதி கோயிலிருந்து ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீரங்கநாச்சியார், இராமனுஜர் ஆகியோருக்கு வஸ்திரம், குடை மற்றும் மங்களப் பொருள்கள் மரியாதை செய்விக்கப்படுகிறது.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் கோயிலிருந்து திருப்பதி வேங்கடமுடையனுக்கு ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை வஸ்திரமரியாதை பொருள்கள், மங்களப் பொருள்கள், பழங்கள் ஆகியவற்றை ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஆண்டாள் யானை மீது வைத்து கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் தலைமையில் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், அறங்காவலர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். 

இதனை முறைப்படி திருப்பதி கோயிலில் சமர்பிக்கப்படுகிறது. ஆடி மாதம் முதல் நாளான புதன்கிழமை காலை ஸ்ரீரங்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வஸ்திரங்கள்  வேங்கடமுடையன் ஸ்ரீசீனிவாசபெருமாள், ஸ்ரீபூமிதேவி, தாயாருக்கு அணிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com