இந்த வாரம் (ஜூலை 19 - 25) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

12 ராசி அன்பர்களுக்கான இந்த வார (ஜூலை 19 - ஜூலை 25) ராசி பலன்களை 
இந்த வாரம் (ஜூலை 19 - 25) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

12 ராசி அன்பர்களுக்கான இந்த வார (ஜூலை 19 - ஜூலை 25) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். அவற்றை மன உறுதியுடன் தகர்த்து எறிவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் 
அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்றவாறு உழைக்க நேரிடும். சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் கவனத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடங்கள் இராது. கணக்கு வழக்குகளில் வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். திட்டமிட்ட வேலைகளில் டென்ஷன் ஏற்பட்டாலும் அவை சாதகமாகவே முடியும். 
கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை ஓங்கும். வீட்டுக்குப் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட, சங்கடங்கள் குறையும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உங்கள் யோசனைகள் அவசியமில்லை. எடுத்த காரியங்களை விரைவிலேயே முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். சூழ்நிலைகளில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கடந்த சில காலங்களாகத் தொடர்ந்து வரும் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு புதிய மாற்றத்தைக் காண நினைப்பீர்கள். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பனை செய்வீர்கள். கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மேல் அக்கறை அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினரின் விடா முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். சமூகத்தில் பெயரும் புகழும்  அடைவீர்கள். 

பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படும். கணவரிடம் உறவு சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள். விளையாட்டின் மீது கவனமாக இருக்கவும்.  

பரிகாரம்:  காஞ்சி அத்திவரதரை தரிசிக்கவும். ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உங்கள் கவலைகள் நீங்கும். அனைத்துப் பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் குறைந்தே காணப்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு குறைந்திருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வை இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தை திறம்பட நடத்தி வெற்றிவாகை சூடுங்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபம் பெறுவர். புதிய குத்தகைகள் கிடைத்து மனம் திருப்தி அடைவர்.  

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். தொண்டர்களின் உதவிகளை ஏற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களுக்குச் செயல்படுத்தி வெற்றி பெறுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனைப் பார்க்கலாம்.  

பரிகாரம்: முருகரை வணங்கி சஷ்டிக்கவசம் பாராயணம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்:  19.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தற்போதைய சூழ்நிலைகளில் சிறிது மாறுதல்களைக் காண்பீர்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயர்ந்த எண்ணங்களால் சிறப்படைவீர்கள். திட்டமிட்டு பணிகளைச் சாதுர்யத்துடன் முடிப்பீர்கள். பொருளாதாரம் வசதியாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகள் பிரச்னைகளுக்குத்த தீர்வு காண்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் சிறப்பாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலம் ஏற்படும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் மனநிம்மதி பெற ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகளால் அனுகூலமுண்டு. மாணவமணிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். 

பரிகாரம்: புதனன்று ராமரையும் வியாழனன்று அனுமனையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 22. 

சந்திராஷ்டமம்:  20, 21.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். செய்யும் தொழிலில் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய நட்புகள் கைகூடும். மனதிலும் உடலிலும் உற்சாகம் பிறக்கும். உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாகவே முடியும். வருமானமும் திருப்திகரமாகவே அமையும். 

வியாபாரிகள் அதிகப் போட்டிகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் உங்களுக்கு உதவுவார்கள். வரவு செலவு விஷயங்களில் பிரச்னைகளைக் குறைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவர்.  

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். எதிரிகளின் மூலம் இருந்து வந்த சங்கடங்கள் குறையும். செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர் தொழில் நிமித்தமாக குறுகிய தூரப்பயணங்களை மேற்கொள்வார்கள். ஆடம்பர செலவுகளைச் செய்து மகிழ்வார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். அனைவரும் நட்புக்கரம் நீட்டுவர். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 25. 

சந்திராஷ்டமம்:  22, 23, 24.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். அநாவசிய அலைச்சல்களுக்கும் வீண் செலவுகளுக்கும் பஞ்சமிராது. வரவு செலவு விஷயங்களில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவர். அவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவுவார்கள். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். 

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கு உதவக்கூடிய போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். 

பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: புதனன்று பெருமாளையும் காஞ்சி அத்திவரதரையும் தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 24.

சந்திராஷ்டமம்:  25.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணவரவிற்குக் குறைவு இராது. முயற்சிகள் வெற்றியை தேடித் தரும். உறவினர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மூத்த உடன்
பிறப்புகள் உதவி செய்யும் நிலை இல்லாததால் அவர்களை எதிர்பார்க்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி  உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். அலுவலக வேலைகளில் போதிய கவனம் செலுத்தவும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சரளமான நிலைமை உருவாகும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும்.  விவசாயிகளுக்கு இதனால் நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிட்டும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

மாணவமணிகளுக்கு அறிவியல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் தங்கள் நேரங்களை சந்தோஷமாகக் கழிப்பர். 

பரிகாரம்: நவக்கிரக வழிபாடும்; தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடும் செய்வது நலம். 

அனுகூலமான தினங்கள்: 19, 23. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தேவையற்ற விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு நற்பெயர் வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தாம் செய்வதுதான் சரி என்று பிடிவாதம் கொள்ளாமல் விட்டுக் கொடுப்பது நல்லது. மேலதிகாரிகள் உங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். 
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். விவசாயிகள் விளைச்சலில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். 

அரசியல்வாதிகள் அனுகூல திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிட அவமதிப்பைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். சக கலைஞர்களும் உதவமாட்டார்கள். வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கு இது அனுகூலமான காலமாகும். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை காப்பதில் சற்றுச் சிரமப்படுவார்கள். 

மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அனுசரித்துச் செல்லவும். 

பரிகாரம்: திங்களன்று சிவனையும் பார்வதி தேவியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20,  24. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இடையூறுகளை புத்திசாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். தேவையான சூழலில் நண்பர்கள் உதவுவர். திட்டமிட்ட செயல்களை திறம்பட முடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நீங்கள் கேட்கும் செய்திகள் நிம்மதியைத் தரும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களோடு ஒற்றுமையுடன் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் நன்மை அடையலாம். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகி, சுமுகச் சூழல் உருவாகும். வாடிக்கையாளர்கள் உங்களை நோக்கி படையெடுப்பார்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். கால்நடைகளால் நன்மைகள் கூடும். 

அரசியல்வாதிகள் மற்றவர்களின் பாராட்டைப் பெற்று புதிய பதவியில் அமர்வார்கள். தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதோடு அவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். 

பெண்மணிகளுக்கு நல்லதும் கெட்டதும் கலந்து வரும். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் நீண்டகாலத் திட்டங்களுக்கு இது உகந்த காலமாகும். 

பரிகாரம்: சனியன்று நவக்கிரகங்களில் உள்ள சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 23. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் எல்லா செயல்களும் திட்டமிட்டதுபோல் நடக்கும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தோரால் நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும். அவர்களிடம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளைச் செய்வார்கள். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்யலாம். கால்நடைகளால் சில செலவுகளையும் சந்திக்க நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளி
விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். 

பரிகாரம்: புதன்கிழமையன்று ஸ்ரீ ராமரை பூஜித்து வரவும். குலதெய்வ வழிபாடு அவசியம். 

அனுகூலமான தினங்கள்: 22, 25. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதிலும் உடலிலும் புதிய தெளிவு ஏற்படும். அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். உடன்பிறந்தோரிடம் இணக்கமான உறவு தொடரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இது சாதகமான காலமாகும். சிறிய அளவு முயற்சிகளிலேயே நல்ல வெற்றிகளை அடைந்து விடுவீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்து  கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பார்கள். வழக்கமான விளைச்சல் குறைய வாய்ப்பு இருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். உங்கள் பணியாற்றும் திறன் கண்டு மேலிடம் பாராட்டும். கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பார்கள்.

பெண்மணிகள் இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷமடைவார்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளின்போது கவனமாக இருக்கவும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரருக்கு தீபமேற்றி வருவது நலம் பயக்கும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். பணவசதி சரளமாக இருக்கும். சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும். மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கால்நடைகளால் செலவுகளும் ஏற்படும்.
  
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். மேலிட ஆதரவினால் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். சில சிரமங்களுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் நிம்மதியான சூழலினால் திருப்தி பெறுவீர்கள். 

குடும்பத்தாரிடம் பாசத்தோடு பழகும் சூழல் உண்டு. மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நன்று. பெருமாளை வணங்கி நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com