திருமலை பெரிய ஜீயர் நாளை சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்

திருமலையில் பெரிய ஜீயர் சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) சாதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்க உள்ளார்.


திருமலையில் பெரிய ஜீயர் சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) 
சாதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்க உள்ளார்.
ஆடி மாத ஏகாதசி அன்று மகாவிஷ்ணு ஆழ்ந்த நித்திரைக்கு சென்று ஐப்பசி மாத ஏகாதசி அன்று விழித்தெழுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று அழைக்கின்றனர். இந்த காலகட்டத்தில் துறவிகளும், ஆசாரியர்களும் விரதம் இருப்பது புராண காலங்களிலிருந்து வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்துமத சாஸ்திரத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது.  துறவிகள் இந்த 4 மாத காலமும் தங்களின் ஸ்நானம், ஜபம், ஹோமம், விரதம், தானம் ஆகியவற்றை உலக நன்மைக்காக மட்டுமே மேற்கொள்வர். அதன்படி வைணவ மகாகுரு ராமாநுஜரின் வம்ச பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக வியாச பூர்ணிமாவுக்கு மறுநாளில் இருந்து சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்படுகிறது. அதைப் பின்பற்றி வரும் திருமலை பெரிய ஜீயர் சடகோபராமாநுஜ சுவாமிகள் வரும் 21-ஆம் தேதி முதல் சாதுர்மாஸ்ய விரதத்தை தன் சீடர்களுடன் தொடங்க உள்ளார். 
அன்று காலை அவர் தன் சீடர்களுடன் திருமலையில் உள்ள திருக்குளத்தில் கால் நனைத்து, வராக சுவாமியை தரிசித்து, ஏழுமலையான் கோயிலுக்கு சென்று அவரையும் தரிசித்துத் திரும்புவார். ஜீயர் உள்ளிட்டோருக்கு தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை செய்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com