மீனாட்சி -  சுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் 1-இல் தொடங்குகிறது.
மீனாட்சி -  சுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் 1-இல் தொடங்குகிறது.

தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதில் தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வேண்டி வழிபாடு நடத்துவர். அதனடிப்படையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது. 

அம்மன் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் ஆகியோரின் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

இதில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஏழாம் நாள் திருவிழாவில் இரவு திருவீதியுலா முடிந்த பின்னர் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது என்று திருக்கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com