Enable Javscript for better performance
உண்டியல் காணிக்கை ரூ3.73 கோடி- Dinamani

சுடச்சுட

    


    திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
    திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.73 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ரூ.5 லட்சம் நன்கொடை
    திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
    81,022 பேர் தரிசனம்
    திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 81,022 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,142 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
     புதன்கிழமை காலை நிலவரப்படி 24 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். அவர்கள் 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன்,  ரூ300 விரைவு தரிசனம்,  திவ்ய தரிசன பக்தரகள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பினர். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. திருமலையில் புதன்கிழமை வெப்பநிலை அதிகபட்சம் 70 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்சம் 41 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. 
    செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 11,772 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 6,802 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,004 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 1,992 பக்தர்களும், கபிலதீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் 4,167 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai