Enable Javscript for better performance
குளத்தை சுத்தம் செய்த பிறகு மீண்டும் அத்திவரதரை குளத்தில் வைக்கலாம்: மன்னார்குடி ஜீயர் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    குளத்தை சுத்தம் செய்த பிறகு மீண்டும் அத்திவரதரை குளத்தில் வைக்கலாம்: மன்னார்குடி ஜீயர் கருத்து

    By DIN  |   Published on : 25th July 2019 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அத்திவரதர் வைக்கப்பட்ட குளத்தைச் சுத்தம் செய்த பிறகு, அந்த குளத்தில் அத்திரவரதரை வைக்கலாம் என்று மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார செண்பகராம ஜீயர் சுவாமிகள் கூறினார்.
    மதுரையில் நடைபெறும் வைகைப் பெருவிழா துறவியர் மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 
    அத்திவரதர் வைக்கப்பட்ட குளம் மாசடைந்து உள்ளது. இதனால் இந்த முறை குளத்தில் இருந்து எடுக்க சிரமம் ஏற்பட்டது. குளத்தை சுத்தம் செய்ய பிறகு அத்திவரதரை குளத்தில் வைக்கலாம்.  மொகலாயர்கள் படையெடுப்பு காரணமாக அத்திவரதர் குளத்தின் உள்ளே வைக்கப்பட்டார். 
    தற்போது இந்து மக்களிடம் ஒருமித்த கருத்து உருவானால் அத்திவரதரை குளத்திற்கு வெளியே வைக்கலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai