நாளை அத்திவரதரை தரிசிக்கச் செல்பவர்கள் இதைப் படித்துவிட்டுச் செல்லவும்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்..
நாளை அத்திவரதரை தரிசிக்கச் செல்பவர்கள் இதைப் படித்துவிட்டுச் செல்லவும்!


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை 31.07.19(நாளை) அரைநாள் மட்டுமே தரிசிக்க முடியும்.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சயன கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். எனவே, அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய, அத்திவரதரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க வைக்கும் பணிகளுக்காக ஜூலை 31-ம் தேதி காலை 12.00 வரை அரை நாள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், வாகன நிறுத்துமிடம் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், கோயில் வளாகத்தைச் சுற்றி சில இடங்களில் பக்தர்களை நிறுத்தி வைத்து தரிசனத்துக்கு அனுமதிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்று ஆட்சியர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com